Advertisement
ஆன்மிகம்

இறந்தவர்கள் அணிந்திருந்த நகையை அணியலாமா ? அணிய கூடாதா ?

Advertisement

நம் வீட்டில் நம்முடைய வாழ்ந்து இயற்கையாக மரணமடைந்த நபர்களின் நகைகளை அணிந்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும்.அவர்களின் நகையை அணிவதாக இருந்தாலும் மனதில் ஒரு சிறு தயக்கம் இருக்கும். ஆனால் இயற்கையான மரணம் வருவதற்கு முன்பாகவே சிறு வயதில் விபத்தின் மூலமாகவோ, உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மற்றும் தற்கொலை செய்து கொண்டு துர்மரணம் அடைந்தவர்களின் நகைகளை அணிந்து கொள்வதில் அனைவரது மனதிலும் தயக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால் அதைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணப்போகிறோம்.

இயற்கையான மரணம் வந்து வயதாகி இறந்தவர்களின் நகைகளை நாம் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சிறுவயதிலேயே துர்மரணம் அடைந்தவர்களின் நகைகளை நாம் பயன்படுத்தவோ அல்லது விற்கவோ கூடாது அதற்கு சில பரிகாரங்கள் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இறந்தவர்களின் வீடுகளில் அவர்களது தீட்டு கழியும் வரை எந்த விதமான கோவில் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் செய்யக்கூடாது என்பதால். அதனால் அந்த தீட்டு காலம் முடியும் வரை முடியும் வரை அந்த நகைகளை மஞ்சள் தண்ணீரில் நன்கு கழுவி அதனை ஒரு டப்பாவில் போட்டு அதனுடன் சிறிது துளசி இலைகளையும் சேர்த்து டப்பாவை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisement

பின்பு 48 நாட்களோ அல்லது ஒரு வருட காலமா தீட்டு நாட்கள்

Advertisement
முடிந்த பின்பு நாம் பத்திரப்படுத்தி வைத்த இறந்தவர்களின் நகையே விற்று பணமாக மாற்றி அதை உங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கு அந்த பணத்தில் அன்னதானம் செய்து கொடுக்கலாம் அல்லது கடலோர கோவில்களுக்கு சென்று அங்கு இறந்தவருக்கு யாகம்
Advertisement
செய்து அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென வேண்டி அங்கிருக்கும் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இதுவும் இல்லை என்றால் இறந்து அடக்கம் செய்ய யாரும் இல்லாத உடல்களுக்கு அடக்கம் செய்வதற்காக அந்த பணத்தை செலவு செய்யலாம் இப்படி நீங்கள் செய்வதன் மூலம் ஒரு அஸ்வமேதை யாகம் செய்ததற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும்.

அதனால் துர் மரணம் அடைந்தவர்களின் நகையை இது போல செய்யுங்கள். அதையும் மீறி அந்த நகையை நாம் அணிந்து கொண்டால் சிறு வயதிலேயே பல ஆசைகளுடன், கனவுகளுடனும் இருந்தவர்கள் இறந்து விட்டால் அவர்களது ஆத்மா இந்த பூலோகத்தில் உலாவிக் கொண்டு இருக்கும் என்பது ஐதீகம். அதனால் அந்த நகைகளை நீங்கள் அணிவதால் அவர்களது ஆத்மா உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் என்று புராணங்கள் நமக்கு கூறுகிறது. அதனால் இதை செய்வது அல்லது செய்யாமல் போவது உங்களுடைய விருப்பம் இதைப் பற்றி கூறுவது என்னுடைய விருப்பம்.

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

18 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

13 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

13 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

15 மணி நேரங்கள் ago