Advertisement
அசைவம்

சுவையான முட்டை குழம்பு செய்வது.

Advertisement

முட்டை குழம்பு என்றாலே அனைவர்க்கும் மிகவும் பிடித்த குழம்பாகும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வேகவைத்த முட்டையில் உடலுக்கு தேவையான நன்மைகள் அடைங்கியுள்ளது.

Advertisement

முட்டையில் அத்தியாவசிய தாதுக்கள் வைட்டமின்கள் உள்ளன.இதனால் தான் முட்டையை சூப்பர் ஃபுட் என்று சொல்வார்கள்.

முட்டையை வேகவைத்து சாப்பிடுவதனால் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.

இந்த முட்டை குழம்பை சுலபமாகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். சுவையான இந்த முட்டை குழம்பை நீங்களும் சமைத்து பாருங்கள்.

முட்டை குழம்பு

Print Recipe
முட்டை குழம்பு என்றாலே அனைவர்க்கும் பிடித்தமான குழம்பாகும்.பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
வேகவைத்த முட்டையில் உடலுக்கு தேவையான நன்மைகள் அடைங்கியுள்ளது.
முட்டையில் அத்தியாவசிய தாதுக்கள் வைட்டமின்கள் உள்ளன.இதனால் தான் முட்டையை சூப்பர் ஃபுட் என்று சொல்வார்கள்.
Course முட்டை குழம்பு
Cuisine Indian, இந்தியன்
Keyword muttai kulambu, முட்டை குழம்பு
Prep Time 15 minutes
Cook Time 6 hours 20 minutes
Total Time 35 minutes
Servings 3 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

முட்டை புரட்டுவதற்கு தேவையான பொருட்கள்.

  • 6 முட்டை வேகவைத்தது
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • ¼ டேபிள் ஸ்பூன் மிளகு பொடி

முட்டை குழம்பு செய்வதற்கான பொருட்கள்.

  • 1 பட்டை
  • 2 ஏலக்காய்
  • 3 கிராம்பு
  • ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
  • 3 பச்சைமிளகாய்
  • ½ மஞ்சள் தூள்
  • 1 கரம் மசாலா
  • 1 மல்லித்தூள்
  • 2 மிளகாய்த்தூள்
  • 1 தக்காளி நறுக்கியது
  • ½ கப் தேங்காய் அரைத்தது

Instructions

முட்டை புரட்டுவது.

  • முதலில் வேகவைத்த முட்டையை சிறிதாக கீறிவிடவும்.பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,கொஞ்சம்
    Advertisement
    உப்பு, சிறிதளவு மிளகு பொடி சேர்த்து கலந்து விடவும். பிறகு முட்டை சேர்த்து சிறிது நேரம் புரட்டிவிடவும்.

குழம்பு செய்வது.

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானபிறகு அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
  • பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும்வரை வதக்கவும்.
  • வதங்கிய பிறகு பச்சைமிளகாய், மஞ்சள்தூள், கரம்மசாலா, மல்லித்தூள், மிளகாய்தூள் அதனுடன் சேர்த்து கலந்து விடவும்.
  • பின்பு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  • தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலந்து சிறிது நேரம் வேக விடவும்.
  • எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அரைத்த தேங்காவை சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
  • வெந்த பிறகு அதில் முட்டை சேர்த்து அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி விடவும்.
  • இப்பொழுது சுவையான முட்டை குழம்பு தயார்…

Nutrition

Serving: 260g | Fat: 20g
Advertisement
swetha

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

4 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

5 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

6 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

10 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

10 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

10 மணி நேரங்கள் ago