Advertisement
அசைவம்

கருவாட்டு குழம்பு இனி இப்படி செய்து பாருங்க!

Advertisement

தினமும் சாதத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு, என்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த கருவாட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்க. சுட சுட சாதத்துடன் கருவாட்டு குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய சுவையில் இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று கருவாட்டு குழம்பு.

Advertisement

இந்த கருவாட்டு குழம்புடன் கழி செய்து சாப்பிட்டால் அதன் ருசிக்கு ஈடே கிடையாது ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

இந்த கருவாட்டு குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து இந்த முறையில் செய்து அசத்துங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

கருவாட்டு குழம்பு | Karuvattu Kulambu Recipe In Tamil

Print Recipe
தினமும் சாதத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு, என்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த கருவாட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்க. சுட சுட சாதத்துடன் கருவாட்டு குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய சுவையில் இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று கருவாட்டு குழம்பு.
இந்த கருவாட்டு குழம்புடன் கழி செய்து சாப்பிட்டால் அதன் ருசிக்கு ஈடே கிடையாது ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
இந்த கருவாட்டு குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து இந்த முறையில் செய்து அசத்துங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword karuvattu kulambu, கருவாட்டு குழம்பு
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 50 கிராம் கருவாடு
  • மஞ்சள் தூள்
  • புளி எலுமிச்சை அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு
  • ½ டீஸ்பூன் வெந்தயம்
  • கப் வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 15 பல் பூண்டு
  • டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 2 தக்காளி நீளமாக நறுக்கியது
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 முருகைக்காய் நறுக்கியது
  • 1 கத்திரிக்காய் நறுக்கியது
  • 2 உருளைக்கிழங்கு நறுக்கியது
  • ½ கப் மொச்சை வேக வைத்தது

Instructions

செய்முறை:

  • முதலில் கருவாட்டை சுடு தண்ணீரில் ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு புளியை ஊறவைத்துக்கொள்ளவும். பூண்டு தட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சேர்த்து பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து மற்றும் கருவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும், மஞ்சள் பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து கலந்து குறைவான தீயில் வைத்து கொள்ளவும்.
  • மசாலாவில் பச்சை வாசனை போனதும், தக்காளி சேர்த்து கொழைய வதக்கவும், பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • தொக்கு பதத்திற்கு வந்ததும், நறுக்கிய காய்கறிகள் முருகைக்காய், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், சேர்த்து 3 நிமிடம் வேக விடவும். பிறகு மொச்சை சேர்த்துகொள்ளவும். அடுத்து சுத்தம் செய்த கருவாட்டை சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • 5 நிமிடம் கொதித்ததும் இறக்கினால் சுவையான கருவாட்டு குழம்பு தயார்.
Advertisement
swetha

Recent Posts

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

1 மணி நேரம் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

5 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

14 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

15 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

16 மணி நேரங்கள் ago