Advertisement
அசைவம்

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். அசைவ பிரியர்கள் அனைவரின் மிக பிடித்த உணவு பட்டியலில் இந்த முட்டை பிரியாணி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். பொதுவாக பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். எவ்வளவு செய்தாலும் அதனுடைய பிரியாணியின் ஏக்கம் அதிகமாக தான் இருக்குமே தவிர குறையாது. காரணம் அதில் சேர்க்கும் பொருட்கள் பாதி வெந்து கொண்டு இருக்கும் போதே நறுமணம் வீச ஆரம்பித்து விடும். பிரியாணி சாப்பிட்டால் செரிக்காது என்று சொன்னவர்கள் கூட சாப்பிட முதல் ஆளாக இருப்பார்கள். அந்த அளவிற்கு நறுமணம் வீசும். பிரியாணி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான உணவு வகை. தற்போது நாம் செய்யும் பிரியாணி முகலாயர்களிடம் இருந்து பெறப்பட்டது.

பிரியாணி என்பது அரிசி, வாசனைப் பொருட்கள், மற்றும் மாமிசம் ஆகியவை கலந்து செய்யப்படுகிறது. பிரியாணி சுவை, மணம், மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்த வகையில் இன்று சூப்பரான மலபார் முட்டை பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். கேரளா ஸ்டைல் உணவுகள் அனைத்தும் நன்கு காரசாரமாகவும், மசாலா சேர்த்து நன்கு சுவையாகவும் இருக்கும். அந்த வகையில் அதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் மலபார் முட்டை பிரியாணி. பிரியாணிகளில் ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பாஸ்மதி அரிசி பிரியாணி என பல வகைகளில் இருந்தாலும் பாசுமதி அரிசியில் செய்யப்படும் மலபார் பிரியாணிக்கு நிகராகாது. மலபார் முட்டை பிரியாணியை வீட்டில் செய்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

மலபார் முட்டை பிரியாணி | Malbar Egg Biriyani Recipe In Tamil

Print Recipe
அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். அசைவ பிரியர்கள் அனைவரின் மிக பிடித்த உணவு பட்டியலில் இந்த முட்டை பிரியாணி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். பொதுவாக பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். எவ்வளவு செய்தாலும் அதனுடைய பிரியாணியின் ஏக்கம் அதிகமாக தான் இருக்குமே தவிர குறையாது. காரணம் அதில் சேர்க்கும் பொருட்கள் பாதி வெந்து கொண்டு இருக்கும் போதே நறுமணம் வீச ஆரம்பித்து விடும். பிரியாணி சாப்பிட்டால் செரிக்காது என்று சொன்னவர்கள் கூட சாப்பிட முதல் ஆளாக இருப்பார்கள். அந்த அளவிற்கு நறுமணம் வீசும்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Malbar Egg Biriyani
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 4 People
Calories 76

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கப் பாசுமதி
  • 5 முட்டை
  • 5 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
    Advertisement
  • புதினா, கொத்தமல்லி சிறிதளவு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 அன்னாசி பூ
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 2 பிரியாணி இலை
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 கப் தயிர்
  • உப்பு தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் அரிசியை நன்கு கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். முட்டையை வேகவைத்து இரண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஒரு வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
    Advertisement
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் அன்னாசி பூ, சோம்பு, மிளகு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து வறுத்து அதனை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, முந்திரி சேர்த்து பொரிந்ததும் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்துக் கொள்ளவும்.
  • பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா சேர்த்து வதக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து மசிய வதக்கவும். தக்காளி வதங்கியதும் தயிர், மல்லி, புதினா சேர்த்து கலந்து விடவும்.
  • பின் வேக வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து கலந்து சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும். பின் இந்த முட்டை கலவையை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
  • பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் பாதி வேகவைத்த சாதத்தை வைக்கவும் பின் அதன் மேல் முட்டை மசாலாவை வைக்கவும். மறுபடியும் சாதம் மற்றும் முட்டை மசாலாவை வைக்கவும்.
  • பின் அதன் மேல் வறுத்து வைத்துள்ள வெங்காயம், முந்திரி, நெய் தூவி மூடி அடுப்பில் குறைந்த தீயில் பத்து நிமிடங்கள் வைத்து இறக்கினால் மலபார் முட்டை பிரியாணி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 76kcal | Carbohydrates: 3.9g | Protein: 6.64g | Fat: 4.5g | Saturated Fat: 1.7g | Sodium: 37mg | Potassium: 138mg | Fiber: 7.3g | Vitamin A: 160IU | Vitamin C: 91mg | Calcium: 24mg | Iron: 7.2mg

இதனையும் படியுங்கள் : ருசியான மலபார் நண்டு மசாலா சுலபமாக இப்படி ஒரு வாட்டி செஞ்சு பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

7 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

7 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

8 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

8 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

10 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

11 மணி நேரங்கள் ago