Advertisement
அசைவம்

கமகம வாசத்துடன் ருசியான நாஞ்சில் மீன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

Advertisement

மீன் குழம்பு ருசிப்பவர்கள் நிச்சயம் அதிகம் இருப்பார்கள். இந்த நாஞ்சில் மீன் குழம்பு சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக இருக்கும். அதனை நம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன் குழம்பை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர். ஆனால் சரியான பக்குவத்தில் நம் நாஞ்சில் ஊரில் செய்தது போன்ற சுவையில் பலராலும் செய்ய முடிவதில்லை. அவ்வாறு பாட்டியின் கை பக்குவத்தில் வைக்கக் கூடிய சுவையான மீன் குழம்பை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Advertisement

தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு ஊழலுக்கு மிகவும் நன்மை பயக்கும், அதுவே மீனை வருதல் இந்த சத்து முழுவதும் கிடைக்காமல் போகும்.. ஆகையால் மீனை பெரும்பாலும் மீன் குழம்பு செய்து சாப்பிட வேண்டும்.

அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் குழம்பு இருக்கிறது. மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம். அப்படி ஒருவித தனி சுவையில் இருக்கும் இந்த நாஞ்சில் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றியே இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

நாஞ்சில் மீன் குழம்பு | Nanjil Fish Curry Recipe In Tamil

Print Recipe
கோழிக்கறி,ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையானஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன்குழம்பை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர். ஆனால் சரியான பக்குவத்தில்நம் நாஞ்சில் ஊரில் செய்தது போன்ற சுவையில் பலராலும் செய்ய முடிவதில்லை. அவ்வாறு பாட்டியின்கை பக்குவத்தில் வைக்கக் கூடிய சுவையான மீன்
Advertisement
குழம்பை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான்இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Course Gravy
Cuisine tamilnadu
Keyword Nanjil Fish Curry
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 649

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ மீன்
  • 1 புளி எலுமிச்சை அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 5 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • பெரிய வெங்காயம்
  • 3 ஸ்பூன் தனியா தூள்
  • 1 ஸ்பூன் சீரகப் பொடி
  • 1 ஸ்பூன் மிளகு
  • கறிவேப்பிலை தேவையான அளவு
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 2 பச்சைமிளகாய்

Instructions

  • மீன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து
    Advertisement
    வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.
  • அதனுடன் ஒரு நெட்டு கறிவேப்பிலை, நறுக்கியப் பச்சைமிளகாய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும் பெரிய வெங்காயத்தை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியைஅடுப்பில் வைத்து அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேங்காய் துருவல்,வெங்காயம், மல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, பெருஞ்சீரகம் மற்றும் இரண்டு நெட்டு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் துருவல் நன்கு பொன்னிறமாக பொலபொலவென்று ஆகும் வரை வறுக்க வேண்டும்.வறுத்தப் பொருட்களை ஐந்து நிமிடங்கள் ஆற வைக்கவும். பிறகுமிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு பொடித்துக்" கொள்ளவும்.
  • அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு மைப் போல் மீண்டும் அரைத்துக் கொள்ளவும். ஏற்கனவே கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் இந்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு குழம்பு போல் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியைஅடுப்பில் வைத்து அரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயத்தை போட்டு தாளிக்கவும், வெந்தயம் பொன்னிறமானதும் கரைத்து வைத்துள்ள குழம்புக் கலவையை ஊற்றவும்.குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் சுத்தம் செய்த் மீன் துண்டுகளை சேர்க்கவும். குழம்பு பாத்திரத்தை மூடி வைக்கும் பொழுது மூடியை சிறிது திறந்திருக்குமாறு வைத்து பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும் மணமணக்கும்.
  • நாவூறும் சுவையான நாஞ்சில் மீன் குழம்பு தயார். இந்த குழம்பை சூடாக்கி இரண்டு நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம்.

Notes

அடுத்த நாள் சாப்பிடும்பொழுது இதன் சுவை இன்னும் கூடும்.

Nutrition

Serving: 300g | Calories: 649kcal | Carbohydrates: 24g | Protein: 64g | Sodium: 352mg | Potassium: 425mg | Calcium: 36mg

இதனையும் படியுங்கள் : இந்த ஞாயிறு கனவா மீன் வாங்கி இப்படி ஒரு தரம் ரோஸ்ட் செஞ்சி பாருங்க வீடே கமகமக்கும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

3 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

3 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

3 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

4 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

6 மணி நேரங்கள் ago

ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக…

7 மணி நேரங்கள் ago