- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
தினமும் சாதத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு, என்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த கருவாட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்க. சுட சுட சாதத்துடன் கருவாட்டு குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய சுவையில் இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று கருவாட்டு குழம்பு.
இந்த கருவாட்டு குழம்புடன் கழி செய்து சாப்பிட்டால் அதன் ருசிக்கு ஈடே கிடையாது ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
இந்த கருவாட்டு குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து இந்த முறையில் செய்து அசத்துங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Ingredients
Method
முதலில் கருவாட்டை சுடு தண்ணீரில் ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு புளியை ஊறவைத்துக்கொள்ளவும். பூண்டு தட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சேர்த்து பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து மற்றும் கருவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும், மஞ்சள் பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து கலந்து குறைவான தீயில் வைத்து கொள்ளவும்.
மசாலாவில் பச்சை வாசனை போனதும், தக்காளி சேர்த்து கொழைய வதக்கவும், பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
தொக்கு பதத்திற்கு வந்ததும், நறுக்கிய காய்கறிகள் முருகைக்காய், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், சேர்த்து 3 நிமிடம் வேக விடவும். பிறகு மொச்சை சேர்த்துகொள்ளவும். அடுத்து சுத்தம் செய்த கருவாட்டை சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
5 நிமிடம் கொதித்ததும் இறக்கினால் சுவையான கருவாட்டு குழம்பு தயார்.






