Advertisement
காலை உணவு

ருசியான பச்சைப்பயறு மசியல் இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி தனி ருசி!

Advertisement

பச்சைப்பயிறு பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இருக்கும். இதனைக் கொண்டு சுண்டல், தோசை செய்வது வழக்கம். குறிப்பாக டயட் இருப்பவர்கள் மத்தியில் இந்த பச்சை பயிறு மிகவும் பிரபலமானது. உடல் எடையை குறைப்பவர்களின் அன்றாட புரத தேவையை பூர்த்தி செய்ய இந்த பச்சை பயிறு நிச்சயம் உதவும். இத்தகைய நற்பண்புகள் நிறைந்த பச்சை பயிறு புரதத்தின் சிறந்த ஆதாரம் ஆகும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பயிறில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

Advertisement

எனவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். அதிலும் அந்த பயறுகளில் பச்சை பயறு மிகவும் சுவையாக இருக்கும். இந்த பச்சை பயறு மசியல் உங்கள் தினசரி டோஸ் முளைகளைப் பெற ஒரு சுவையான வழியாகும். ருசியும் நறுமணமும் கொண்டது, இது வேகவைத்த சாதம் மற்றும் நெய்யுடன் சாப்பிடுவது சிறந்தது அதுமட்டுமின்றி தோசை அல்லது புல்காவுடன் பரிமாறலாம்.

பச்சைப்பயறு மசியல் | Green Moong Dal Gravy Recipe in Tamil

Print Recipe
பச்சைப்பயிறு பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இருக்கும். இதனைக் கொண்டு சுண்டல், தோசை செய்வது வழக்கம். குறிப்பாக டயட் இருப்பவர்கள் மத்தியில் இந்த பச்சை பயிறு மிகவும் பிரபலமானது. உடல் எடையை குறைப்பவர்களின் அன்றாட புரத தேவையை பூர்த்தி செய்ய இந்த பச்சை பயிறு நிச்சயம் உதவும். இத்தகைய நற்பண்புகள் நிறைந்த பச்சை பயிறு புரதத்தின் சிறந்த ஆதாரம் ஆகும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பயிறில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த பச்சை பயறு மசியல் உங்கள் தினசரி டோஸ் முளைகளைப் பெற ஒரு சுவையான வழியாகும். ருசியும் நறுமணமும் கொண்டது, இது வேகவைத்த சாதம் மற்றும் நெய்யுடன் சாப்பிடுவது சிறந்தது அதுமட்டுமின்றி தோசை அல்லது புல்காவுடன் பரிமாறலாம்.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian
Keyword pachai payru gravy
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 90

Equipment

  • 1 குக்கர்
  • 1 மண்சட்டி
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 கப் பச்சை பயறு
  • 1 பெரிய
  • 1 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  • 1/4 டீஸ்பூன் கரம்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி இலை சிறிதளவு
  • உப்பு தேவையானஅளவு
  • எண்ணெய் தேவையான க்அளவு

Instructions

  • பச்சை பயரை நன்கு வறுத்து கழுவி, குக்கரில் சேர்த்து‌ மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வைத்து எடுக்கவும்.
  • பின்னர் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து மற்றோரு முறை வேக வைக்கவும்.
  • பின் வெங்காயம், தக்காளி ,பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் எடுத்து வேகும் பச்சை பயரில் சேர்த்து நன்கு மசித்து விடவும்.
  • மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும். உப்பு சரிபார்த்து நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் பச்சை பயறு மசியல் தயார்.
  • மிகவும் சத்தான இந்த பச்சை பயறு மசியல் சூடான சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து கொஞ்சம் நெய் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 600g | Calories: 90kcal | Carbohydrates: 5.9g | Protein: 14.2g | Fat: 0.2g | Sodium: 4mg | Fiber: 15.4g | Sugar: 2g | Vitamin C: 13.5mg | Calcium: 80.2mg | Iron: 0.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

10 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

17 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago