Advertisement
சட்னி

காரசாரமா குண்டூர் கார சட்னி இந்த பக்குவத்தில் செய்து செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!

Advertisement

உங்களுக்கு கார சட்னினா ரொம்ப பிடிக்குமா ? அதுவும் குண்டூர் கார சட்னி என்றால் இட்லி தோசைக்கு அதிகமா தொட்டு சாப்பிடுவதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இதுல என்ன நிறைய பேருக்கு காரமா சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி காரத்து மேல விருப்பம் இருக்கிறவங்களுக்காகவே ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான இந்த குண்டூர் கார சட்னியை நம்ம செய்ய போறோம்.

ஆந்திரா பக்கம் அப்படின்னு சொன்னாலே அங்க ரொம்ப ரொம்ப ஃபேமஸான ஒரு விஷயம் காரம் தான். காரத்துக்கு பேர் போன ஊர் வந்து ஆந்திர மாநிலம் அப்படின்னு சொல்லலாம். அப்படி காரத்துக்கு பெயர் போன அந்த ஊர்ல இருந்து இப்ப நம்ம குண்டூர்ல காரச் சட்னி செய்து சாப்பிட போறோம். இந்த குண்டூர் கார சட்னி செம்ம காரமா இருக்க போகுது உங்களுக்கு காரம் எந்த அளவுக்கு பிடிக்கும் அப்படிங்கிறது இந்த குண்டூர் கார சட்னி சாப்பிட்டால் தெரிஞ்சிக்கலாம்.

Advertisement

அப்படி ஒரு காரமா இருக்க போகுது. இட்லியை தோசை இதுக்கெல்லாம் சுவையா கொடுக்கக்கூடியது அதோட சட்னியும் சாம்பாரும் தான். அப்படி நீங்க ருசியான இட்லியும் தோசையும் சாப்பிடணும்னா இந்த குண்டூர் கார சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்க. ரொம்பவே சுவையா இன்னும் நிறைய சாப்பிடணும் என்கிற ஆசையும் அதிகமா தூண்டும் இந்த குண்டூர் கார சட்னி. சரி வாங்க இந்த குண்டூர் கார சட்னி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

குண்டூர் காரசட்னி | Guntur Kara chutney Recipe In Tamil

Print Recipe
இட்லியை தோசை இதுக் கெல்லாம் சுவையா கொடுக்கக்கூடியது அதோட சட்னியும் சாம்பாரும் தான். அப்படி நீங்கருசியான இட்லியும் தோசையும் சாப்பிடணும்னா இந்த குண்டூர் கார சட்னி வைத்து சாப்பிட்டுபாருங்க. ரொம்பவே சுவையா இன்னும் நிறைய சாப்பிடணும் என்கிற ஆசையும் அதிகமா தூண்டும்இந்த குண்டூர் கார சட்னி. சரி வாங்க இந்த குண்டூர் கார சட்னி எப்படி செய்யலாம்
Advertisement
என்றுதெரிந்து கொள்ளலாம்.காரத்து மேல விருப்பம் இருக்கிறவங்களுக்காகவே ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான இந்த குண்டூர் கார சட்னியை நம்மசெய்ய போறோம்.
Course chutney
Cuisine tamil nadu
Keyword Guntur Kara Chutney
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 10 காய்ந்த மிளகாய்
  • 15 பல் பூண்டு
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 15 சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் வெல்லம்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் காய்ந்த மிளகாய் காம்பை கிள்ளி விட்டு அதன் மேல் உள்ள தலைப்பகுதி
    Advertisement
    நறுக்கி விட்டு உள்ளே உள்ள மிளகாய் விதைகளை எடுத்து விட வேண்டும். விதைகளை எடுத்த காய்ந்த மிளகாய்களை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  •  பிறகு பூண்டு பற்களை தோலுரித்து எடுத்துக் கொண்டு இஞ்சிக் கல்லில் தட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதே போல சின்ன வெங்காயத்தை தோலுரித்து விட்டு இஞ்சிக்கல்லில் சேர்த்து தட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
     
  • ஒரு மணி நேரம் ஊறிய காய்ந்த மிளகாய்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் புளியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய்ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு நசுக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • நசுக்கிய பூண்டை ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு அதில் நசுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அரைத்து வைத்துள்ள மிளகாய் புளி விழுதை சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொதிக்க விடவும்.
  • இந்தக் கார சட்னி நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.
     
  •  காரமான கம கம சூடான குண்டு கார இட்லி, தோசைக்கு சாப்பிட தயார்.

இதையும் படியுங்கள் : வீட்டில் சிறிது உளூந்து இருந்தால் போதும் ஒரு தரம் சட்னி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

9 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

9 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

9 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

11 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

12 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

12 மணி நேரங்கள் ago