Advertisement
சைவம்

வாரம் ஒரு முறை வீடே மணக்க மணக்கு ருசியான பலாபிஞ்சு சாம்பார் இப்படி செய்து பாருங்க!

Advertisement

பல  நிகழ்ச்சிகள்ல அசைவ உணவுகளுக்கு பதிலாக சைவ உணவுகளை அசைவ சுவையில் செய்து குடுத்துட்டு இருக்காங்க. அப்படி மட்டனுக்கு பதிலா  பயன்படுத்தப்படுகிற ஒரு காய்தான் பலாக்காய் பிஞ்சு. அப்படி அந்த பலாக்காய் பிஞ்சு எவ்வளவு சுவையாக ருசியாவும் அப்படியே மட்டன் சுவையில் இருக்கு. சைவ மட்டன் என்று அழைக்கப்படும் இந்த பலாக்காய் பிஞ்சு.

இந்த பலாக்காய் மசாலா ரொம்பவே சுவையா எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். அசைவ சுவைல இந்த பலாக்காய் மசாலா எப்படி செய்வது பார்க்கலாம். இதுவரைக்கும் பலாக்காய் பிஞ்சில எந்த ஒரு உணவும் செய்யாதவங்க இப்போ புதுசா ட்ரை பண்ணி பாருங்க. இது ரொம்பவே சுவையா அப்படியே மட்டன் சுவையில் கிடைக்கும்.

Advertisement
Advertisement

இது சைவ உணவுகள் சாப்பிடறவங்களா இருந்தீங்கன்னா நீங்க இந்த பலாக்காய சமைத்து சாப்பிடும்போது உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இப்ப கடைகளில் நிறையவே கிடைக்கிறது இந்த பலாக்காய் பிஞ்சு.  அப்படி கிடைக்கலைனு கவலைப்படவே வேண்டாம் கிராமப்புறங்களையும் சரி நகர்புறங்களையும் சரி எல்லா காய்கறி கடைகளையும் இப்போ பலா காய்.பிஞ்சுகள் கிடைக்க ஆரம்பிக்குது. தோலை செத்திட்டு அழகா சின்ன சின்ன சின்னதா கட் பண்ணி வேகவைத்து சமைத்தால் ரொம்பவே சுவையா இருக்கும். அப்படி சுவையான ருசி இந்த மட்டன் சுவையில் பலாக்காய் சாம்பார் எப்படி செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

பலாபிஞ்சு சாம்பார் | Palaapinju Sambar Recipe In tamil

Print Recipe
சைவ உணவுகள் சாப்பிடறவங்களா இருந்தீங்கன்னா நீங்க இந்த பலாக்காய சமைத்து சாப்பிடும்போது உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இப்ப கடைகளில் நிறையவே கிடைக்கிறது இந்த பலாக்காய் பிஞ்சு.  அப்படிகிடைக்கலைனு கவலைப்படவே வேண்டாம் கிராமப்புறங்களையும் சரி நகர்புறங்களையும் சரி
Advertisement
எல்லா காய்கறி கடைகளையும் இப்போ பலா காய்.பிஞ்சுகள் கிடைக்க ஆரம்பிக்குது. தோலை செத்திட்டு அழகா சின்ன சின்ன சின்னதா கட் பண்ணி வேகவைத்து சமைத்தால் ரொம்பவே சுவையா இருக்கும். அப்படி சுவையான ருசி இந்த மட்டன் சுவையில் பலாக்காய் சாம்பார் எப்படி செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Palapinju Sambar
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 105

Equipment

  • 1 குழம்பு பாத்திரம்

Ingredients

  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 1 பலாபிஞ்சு 
  • 1 தக்காளி
  • 2 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/4 மூடி தேங்காய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் பலா பிஞ்சை தோல் நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.  தேங்காயைமிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
  • பின் குக்கரில் பருப்பு, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  வெங்காயம்நன்றாக வதங்கியதும் அதில் பலா பிஞ்சு சேர்த்து மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
  •  
    பலாபிஞ்சு வெந்த பிறகு தேங்காயை சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேகவைத்த பருப்பில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • சாம்பார் கொத்தித்த உடன் இறக்கி சாதத்தோடு சூடாக பரிமாறினால் சுவையான பலாபிஞ்சு சாம்பார் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Calcium: 3.1mg | Iron: 0.26mg

இதையும் படியுங்கள் : பருப்பில்லாதே நேரங்களில் ரோட்டு கடை ஸ்டைல் தக்காளி சாம்பார் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

3 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

6 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

7 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

11 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

21 மணி நேரங்கள் ago