பெண்களை பாடாய்ப்படுத்தும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதலைப் போக்கும் கானாவாழைக்கீரை!

- Advertisement -

கானா வாழை… இந்தக்கீரையோட பேரைக்கேட்டதும் சிலபேருக்கு புதுசா இருக்கும். இந்தக் கீரைக்கு கானாங்கோழிக்கீரைன்னும் ஒரு பெயர் இருக்கு. புரதச்சத்து, மாவுச்சத்து நிறைஞ்ச தாவரம் இது. ரொம்ப சாதாரணமா ரோட்டோரத்துல வளர்ந்திருக்கும். முக்கியமா மழைக்காலங்கள்லயும், ஈரப்பதம் உள்ள இடங்கள்லயும் இது செழிச்சி வளரும். இன்னும் சொல்லப்போனா குப்பைமேடுகள்ல வளரக்கூடிய குப்பைக்கீரை மாதிரி இந்தக்கீரையும் எல்லா இடத்திலயும் வளரும். ஆனா இது ரொம்ப விசேஷமான கீரை. ஆண்களுக்கு போதுமான அளவு சக்தியைக் கொடுக்கக்கூடியது. இல்லற இன்பத்தை வாரி வழங்கக்கூடிய அற்புதமான கீரை.

-விளம்பரம்-


கலவைக்கீரையில் கானாவாழை


இந்தக்கீரையை அடையாளம் தெரியலன்னா கீரை விக்கிற பாட்டிமார்கிட்ட கேளுங்க சொல்வாங்க. கலவைக்கீரைங்கிற பெயர்ல விப்பாங்க. அதுல இந்த கானாவாழைக்கீரையும் இருக்கும். தானா வளரக்கூடிய இந்தக்கீரையை சாப்பிட்டு அதோட பலனை ஒருதடவை அனுபவிச்சா அதுக்கு அப்புறம் விட மாட்டீங்க. இதோட இலை வாழை இலை மாதிரியே வழவழன்னு இருக்கும். ஊதா நிறத்துல பூ பூக்கும். ஈரப்பசை உள்ள இந்தக்கீரையோட தண்டு குழாய்மாதிரி இருக்கும்.

- Advertisement -


உடல் சூடு, வெள்ளைப்படுதலுக்கு மருந்து


உடல் சூடு அதிகமா உள்ளவங்களும் உடம்புல பலம் இல்லாதவங்களும் இந்தக்கீரையை பருப்பு சேர்த்து சமைச்சிச் சாப்பிட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும். வெறும் கீரையா இல்லாம ஒருநாள் தூதுவேளைக்கீரையையும் சேர்த்து சமைச்சி சாப்பிடலாம். இதை சாப்பிடுறதால மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும், சொறி சிரங்கு காணாமப்போயிரும். உடல் சூடு குறையும்போது வெள்ளைப்படுதல், வெட்டை நோய்னு பெண்களுக்கு வரக்கூடிய பல பிரச்சினைகள் சரியாகும். இந்தப்பிரச்சினை பெண்களுக்கு மட்டுந்தான் வரும்னு நினைக்கவேண்டாம். ஆண்களுக்கு வரக்கூடிய பிரச்சினைதான்.


வெள்ளை ஒழுக்கு போக்கும் கானாவாழை


முக்கியமா உடல்சூடு காரணமா பிறப்பு பகுதியில வெள்ளையா ஒழுகிக்கிட்டே இருக்கும். அதனால இந்தப்பிரச்சினை உள்ளவங்க பிறப்புறுப்பை சுத்தமா வச்சிக்கிடணும். அடிக்கடி கழுவுறதோட கானாவாழைக்கீரையை சமைச்சி சாப்பிட்டா நல்ல பலன் கிடைக்கும். ஏன் இதை திரும்பத் திரும்ப சொல்றோம்னா இந்தப்பிரச்சினை வந்தா பலபேர் யார்கிட்டயும் சொல்றதுக்கு கூச்சப்படுவாங்க. டாக்டர்கிட்ட சொல்றதுக்குக்கூட யோசனை பண்ணுவாங்க. அப்படிப்பட்டவங்க தயங்காம இந்த கானாவாழைக்கீரையை சமைச்சி சாப்பிட்டா போதும்.


வெள்ளைப்படுதல் குணமாகும்


கானாவாழைக்கீரையை சமைச்சி சாப்பிடுறது மட்டுமில்லாம அதோட சம அளவு கீழாநெல்லிக்கீரை சேர்த்து அரைச்சி நெல்லிக்காய் அளவு எடுத்து எருமைத்தயிர் சேர்த்துச் சாப்பிடலாம். காலைல, சாய்ங்காலம்னு ஏழு நாள் சாப்பிட்டு வந்தா வெள்ளைப்படுதல் பிரச்சினை பூரண குணமாகும். இதேமாதிரி பெண்களை பாடாய்ப்படுத்துற பிரச்சினைகள்ல ஒண்ணு பெரும்பாடு. மாதவிடாய் நேரத்துல அதிகமா ரத்தம் போறதைத்தான் இப்படி சொல்வாங்க. இந்தப்பிரச்சினைக்கு கானாவாழைக்கீரையோட அருகம்புல்லையும் அசோகப்பட்டையையும் சேர்த்து அரைச்சி நெல்லிக்காய் அளவு காலை, மாலைன்னு சாப்பிட்டு வந்தா சரியாயிரும்.

-விளம்பரம்-


ஆண்மை அதிகரிக்க உதவும்


இது எல்லாத்துக்கும் மேல ஆண்மைக்குறை பிரச்சினை சரிபண்றதுல கானாவாழைக்கீரைக்கு முக்கிய பங்கு உண்டு. கானாவாழைக்கீரையோட சம அளவு முருங்கைப்பூவை சேர்த்து தண்ணிவிட்டு கொதிக்க வச்சி வடிகட்டி பால், கல்கண்டு சேர்த்துக் குடிச்சிட்டு வந்தா ஆண்மை அதிகரிக்கும். தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டு வந்தா தாம்பத்திய உறவுல அதிக நேரம் ஈடுபட முடியும். 40 நாள் சாப்பிட்ட பிறகுதான் பலன் கிடைக்கும்.


படுக்கைப்புண் சரியாகும்


சர்க்கரை நோயாளிகளுக்கு கால் பகுதியில வரக்கூடிய புண்ணுக்கும், வயசானவங்க சிலபேருக்கு உடம்பு சரியில்லாமப்போய் படுத்த படுக்கையா ஆன பிறகு வரக்கூடிய படுக்கைப்புண்ணுக்கும் கானாவாழை அருமையான மருந்து. கானாவாழை இலையை மட்டும் மையா அரைச்சி புண் உள்ள இடத்துல வச்சி கட்டிட்டு வந்தா போதும், சீக்கிரமா புண் ஆறிரும். இதேமாதிரி சாதாரண காய்ச்சலுக்கு கானாவாழைக்கீரையை வேரோட சேர்த்து கசாயம் வச்சி குடிச்சா சரியாயிரும். இந்த மாதிரி நிறைய பிரச்சினைகளை சரிபண்ணக்கூடியது கானாவாழை. எளிமையாகக் கிடைக்கும் இந்த மூலிகையை பயன்படுத்தி பலன் பெறுங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here