Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸாக மொறு மொறு வெள்ளை காராமணி வாழைப்பூ வடை இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

வடை அப்படின்னா ஞாபகத்துக்கு வருது மெது வடை தான். அதாவது உளுந்து வடை இந்த உளுந்து வடையை தான் ரொம்ப அதிகமா விரும்பி சாப்பிடுவோம் . அதுக்கப்புறம் கடலை பருப்பு வடை இந்த பருப்பு வடைகள்ல மற்ற பல பருப்புகளை கொண்டு வடை செய்ய தொடங்கிவிட்டோம். அப்படி என்ன வேற வேற விதவிதமான பருப்புகளை கொண்டு வடை செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.  இந்த காராமணியில நிறைய புரதச்சத்துக்களும் ஊட்டச்சத்துக்களும் அதிகமாக இருக்கிறதுனால இந்த காராமணியில வடை செய்து சாப்பிடும்போது அது நமக்கு ரொம்ப நல்லது.

மாலை நேரம் சிற்றுண்டி உணவாக எடுத்துக் கொள்ளும்போது டீ கூட சேர்த்து சாப்பிடும்போது ரொம்ப சுவையா இருக்கும். இந்த காராமணி பருப்பு  வாழை பூவையும் சேர்த்து ஸடை செய்து கொள்ளலாம். ஒரு தாவரத்தோட கிழங்கு இருந்து இலைகள் வேர்கள் எல்லாத்துலயும் பயன் கொடுக்கக்கூடியது வாழைமரம். அந்த வாழை மரத்தில் இருக்கும் வாழைப்பூ அதிக துவர்ப்புசுவை  உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை கொடுக்க கூடியது. 

Advertisement

வாழைப்பூவில் இருக்குற அதிகப்படியான துவர்ப்புகள் சக்தி பெண்களுக்கு ரொம்ப நல்ல உதவி பண்ணும் பெண்களோடு கர்ப்பப்பை பிரச்சினைகளுக்கு அந்த வாழைப்பூ ரொம்பவுமே உதவியா இருக்கும். ஆகையினால் இந்த காராமணி பயறில் உள்ள ஊட்டச்சத்துகளோடு சேர்த்து வாழைப்பூவும் சாப்பிடும்போது இது மேலும் நல்ல பலன்களை நமக்கு கொடுக்குது. அதனால வெள்ளை காராமணி மற்றும் வாழைப்பூ வடை செய்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்திற்கு மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம். இந்த காராமணி வாழைப்பூ வடை ரொம்ப சுவையானதாக இருக்கும் நீங்க வெள்ளை காராமணி இல்லனா பிரவுன் கலர் காராமணி ரெண்டு காராமணியிலிருந்து செய்யலாம். எந்த காராமணியில வேணும்னாலும் இந்த வடையை நீங்க செய்து கொள்ளலாம். காராமணியை கொஞ்ச நேரம் ஊற.வைத்து பிறகு வடை செய்யனும்  காரணம் என்னன்னா இருக்கும் நாம ஊற வைத்து அரைக்கும் போது தான் நமக்கு உபரி அதிகமா கிடைக்கும் . சரி வாங்க இந்த வெள்ளைக்கார மணி வாழைப்பூ வடை எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

காராமணி வாழைப்பூ வடை | Kaaramani Bananaflower Vada Recipe In Tamil

Print Recipe
வாழைப்பூவில் இருக்குற அதிகப்படியான துவர்ப்புகள் சக்தி பெண்களுக்கு ரொம்ப நல்ல உதவி பண்ணும் பெண்களோடு கர்ப்பப்பை பிரச்சினைகளுக்கு அந்த வாழைப்பூ ரொம்பவுமே உதவியா இருக்கும். ஆகையினால்
Advertisement
இந்த காராமணி பயறில் உள்ள ஊட்டச்சத்துகளோடு சேர்த்து வாழைப்பூவும் சாப்பிடும்போது இது மேலும் நல்ல பலன்களை நமக்கு கொடுக்குது. அதனால வெள்ளை காராமணி மற்றும் வாழைப்பூ வடை செய்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்திற்கு மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம். இந்த காராமணி வாழைப்பூ வடை ரொம்ப சுவையானதாக இருக்கும் நீங்க வெள்ளை காராமணி இல்லனா பிரவுன் கலர் காராமணி ரெண்டு காராமணியிலிருந்து செய்யலாம். எந்த காராமணியில வேணும்னாலும் இந்த வடையை நீங்க செய்து கொள்ளலாம். காராமணியை கொஞ்ச நேரம் ஊற.வைத்து பிறகுவடை செய்யனும்  காரணம்என்னன்னா
Advertisement
இருக்கும் நாம ஊற வைத்து அரைக்கும்போது தான் நமக்கு உபரி அதிகமா கிடைக்கும் . சரி வாங்க இந்த வெள்ளைக்கார மணி வாழைப்பூ வடை எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.
 
Course snacks
Cuisine tamil nadu
Keyword Kaaramani Bananaflower Vada
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 250

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் வெள்ளைக் காராமணி
  • 1/2 கப் வாழைப்பூ
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
  • 2 சிட்டிகை பெருங்காயத் தூள்
  • உப்பு  தேவையான அளவு

பொரிப்பதற்கு

  • எண்ணெய்  தேவையானஅளவு

Instructions

  • முதலில் காராமணியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் காராமணியை  நன்குகழுவி மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன், காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ள வேண்டும். அந்த மாவில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, பெருங்காயத் தூள்,  பொடியாகநறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, கறிவேப்பிலையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து லேசாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • பொரித்து எடுத்த வடைளை ஒரு தட்டில்வைத்து பரிமாறினால் சூடான சுவையான சத்து மிக்க காராமணி வாழைப்பூ வடை தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 250kcal | Carbohydrates: 12g | Protein: 5g | Fat: 0.4g | Saturated Fat: 0.1g | Sodium: 62mg | Potassium: 294mg | Fiber: 5.9g | Calcium: 66mg | Iron: 15mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

5 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

7 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

17 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago