Advertisement
சைவம்

கறிவேப்பிலை குழம்பு இப்படி செய்து பாருங்க! சுடு சோறுடன் ஊற்றி சாப்பிட அற்புதமாக இருக்கும்!

Advertisement

விதவிதமான குழம்புகளில் கறிவேப்பிலை குழம்பு ரொம்பவே சுவையான ஒரு குழம்பாக இருக்கிறது.ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும், தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தவும், இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும்,

இதையும் படியுங்கள் : கோங்குரா முட்டை குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Advertisement

இந்தக் குழம்பு நல்ல மருத்துவ குணம் நிறைந்த குழம்பாக இருக்கும். அதே சமயம் காய்ச்சல் வந்தவர்களுக்கு சாப்பிட எதுவுமே பிடிக்காது. அந்த சமயத்தில் சுட சுட சாதத்தோடு இந்த குழந்தை போட்டு பிசைந்து கொடுத்தால் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள். வாங்க அந்த சூப்பரான மருத்துவக் குழம்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

கறிபே்பிலை குழம்பு | Karivepillai Kulambu Recie in Tamil

Print Recipe
விதவிதமான குழம்புகளில் கறிவேப்பிலை குழம்பு ரொம்பவே சுவையான ஒரு குழம்பாக இருக்கிறது.ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும், தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தவும், இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், இந்தக் குழம்பு நல்ல மருத்துவ குணம் நிறைந்த குழம்பாக இருக்கும். அதே சமயம் காய்ச்சல் வந்தவர்களுக்கு சாப்பிட எதுவுமே பிடிக்காது. அந்த சமயத்தில் சுட சுட சாதத்தோடு இந்த குழந்தை போட்டு பிசைந்து கொடுத்தால் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Karivepilli, கறிவேப்பிலை
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4 Peopke
Calories 225
Advertisement

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 கப் கறிவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 2 தக்காளி நறுக்கியது
  • 1 Tsp வெந்தயம்
  • 2 வர மிளகாய்
  • 15 பற்கள் பூண்டு
  • 1 Tsp சீரகம்
  • 1 Tsp கடுகு
  • புளி சாறு எலுமிச்சை அளவு புளியில் கரைத்தது
  • 1 Tsp மஞ்சள் தூள்
  • 1 Tbsp மிளகாய் தூள்
  • 1 Tbsp மல்லி தூள்
  • 1/4 கப் எண்ணெய்
  • 1 Tsp நாட்டு சர்க்கரை
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 1 Tsp கடுகு
  • 1 Tsp சீரகம்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கறிவேப்பிலையை சேர்த்து 5-10 நிமிடம் வறுத்து, அத்துடன் பாதி பூண்டு பற்களை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்கவும்.
    Advertisement
  • அதன் பின்குளிர்ந்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரனம், வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளித்து,
  • பின் மீதம் இருக்கும் பூண்டு பற்கள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை சேர்த்து, உப்பு மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
  • அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை பேஸ்ட்டை சேர்த்து கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைக்கவும்.
  • இறுதியில் சிறு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அத்துடன் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், கறிவேப்பிலை குழம்பு ரெடி!

Nutrition

Serving: 600G | Calories: 225kcal | Carbohydrates: 3g | Protein: 13g | Fat: 1g | Saturated Fat: 1.1g | Sodium: 21mg | Potassium: 374mg | Sugar: 5g | Iron: 15mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

7 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

18 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

23 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago