Advertisement
சைவம்

தமிழரின் பாரம்பரிய சுவையான கேப்பை கூழ் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

இன்று நம் தமிழரின் பாரம்பரிய உணவான கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் தமிழர்கள் அந்த காலத்திலேயே அவர்கள் விவசாயம் செய்யும் ஒவ்வொரு பொருளின் மகத்துவத்தை அறிந்து வைத்துக் கொண்டுதான் அந்த பொருட்களை எல்லாம் விவசாயம் செய்து அதனை சரியான முறையில் பயன்படுத்தினார்கள். அதில் இந்த கூழும் ஒன்றுதான். சிறு தானியங்களை பயன்படுத்தி அவற்றை கூழாக செய்து அதை உணவாக எடுத்துக் கொள்வதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தால் தான்.

இதையும் படியுங்கள் : பாரம்பரிய பச்சை புளி ரசம் செய்வது எப்படி ?

Advertisement

நம் உணவு பட்டியலில் இன்றைக்கு வரைக்கும் முக்கிய இடத்தில் கூழ் இருக்கிறது. ஆனால் நாம் நாவின் ருசிக்காக இன்று பல வகையான உணவுகளை சாப்பிட்டு நம்ம உடம்பை நஞ்சாக மாற்றி கொண்டு இறுக்கிறோம். அந்த விதத்தில் இன்று நாம் கேப்பை கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கேப்பை கூழ் செய்து சாப்பிடும் போது நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி எந்த நோய்களும் நம் உடம்பில் அண்டாமல் பார்த்துக் கொள்ளும். அதனால் இன்று இந்த கேப்பை கூழ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கேப்பை கூழ் | Keppai Kool Recipe in Tamil

Print Recipe
சிறு தானியங்களை பயன்படுத்தி அவற்றை கூழாக செய்து அதை உணவாக எடுத்துக் கொள்வதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தால் தான் நம் உணவு பட்டியலில் இன்றைக்கு வரைக்கும் முக்கிய இடத்தில் கூழ் இருக்கிறது. ஆனால் நாம் நாவின் ருசிக்காக இன்று பல வகையான உணவுகளை சாப்பிட்டு நம்ம உடம்பை நஞ்சாக மாற்றி கொண்டு இறுக்கிறோம். அந்த விதத்தில் இன்று நாம் கேப்பை கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கேப்பை கூழ் செய்து சாப்பிடும் போது நம் உடலில் இருக்கும் நோய்
Advertisement
எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி எந்த நோய்களும் நம் உடம்பில் அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Keppai, கேப்பை, ராகி
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 152

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Ingredients

  • 1 கப் கேப்பை மாவு
  • 3 கப் தண்ணீர்
  • 1 துண்டு இஞ்சி
  • 1  பச்சை மிளகாய்
  • 4 சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 6 கருவேப்பிலை நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கப் கேப்பை மாவு எடுத்து ஒரு
    Advertisement
    பவுளில் சேர்த்து அதனுடன் ஒரு கப் அளவிலான தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.
  • பின் தண்ணீர் நன்றாக சூடேறியதும் நம் கரைத்து வைத்திருக்கும் கேப்பை மாவு இதனுடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருங்கள். பின்பு ஒரு 12 நிமிடங்கள் கேப்பை மாவை அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டு இருங்கள்.
  • பின் கேப்பை மாவு தண்ணீர் வற்றி கெட்டியான பதத்திற்கு வரும்வரை கிளறிவிட்டு பின் பாத்திரத்தை இறக்கி கேப்பை கூழை நன்றாக குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஒரு பச்சை மிளகாயை நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு கேப்பை மாவு நன்கு குளிர்ந்ததும் உங்களுக்கு தேவையான அளவு மாவு எடுத்து ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் முக்கால் கப் அளவு தயிர், இடித்த மிளகாய், நறுக்கிய ஐந்து சின்ன வெங்காயம், தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய கருவேப்பிலை இலைகளை நறுக்கி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
  • பின் உங்களுக்கு குடிப்பதற்கு ஏற்ற தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான கேப்பை கூழ் தயாராகிவிட்டது.
  • இதனுடன் நீங்கள் மாங்காய், மிளகாய் வத்தல், கத்திரிக்காய் வத்தல் வெண்டைக்காய் வத்தல் போன்றவற்றை வைத்து சாப்பிடும் போது அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Nutrition

Serving: 100gram | Calories: 152kcal | Carbohydrates: 56g | Protein: 18g | Fat: 1g | Saturated Fat: 2.1g | Cholesterol: 1mg | Sodium: 12mg | Potassium: 427mg | Fiber: 2g | Sugar: 1.1g
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

7 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

7 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

8 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

11 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

11 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

13 மணி நேரங்கள் ago