Advertisement
சைவம்

கேரளா ஸ்டைல் அவியல் கூட்டு இப்படி செஞ்சி பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!

Advertisement

அவியல் கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற உணவு வகை. கேரளா மட்டுமின்றி அது தென்னிந்தியா முழுவதும் செய்யப்படும் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு. தென்னிந்திய உணவுகளில் கேரளா உணவுகள் தனித்துவமான சுவை கொண்டவையாக உள்ளன. இந்த உணவுகளில் அவியில் மிகவும் புகழ் பெற்ற சைடிஷ்ஷாக உள்ளது. இந்த கேரளா ஸ்டைல் அவியல் தயார் செய்வதில் சிலர் சிரம படுகின்றனர். வீட்டில் இருந்தே சுவையான கேரளா ஸ்டைலில் அவியல் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

சிலருக்கு இந்த ரெசிபி செய்ய தெரியாமல் கூட இருக்கலாம். அந்த கவலையை போக்க இந்த பதிவு உங்களுக்கு உதவும். அவியல் என்பது பல காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவை நிறைந்த உணவாகும். இதில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய், தேங்காய், தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் அவியலுக்கு தனித்துவமான சுவையையும், மணத்தையும் கொடுக்கின்றன. ஒரு சிலர் புளிப்பு சுவைக்காக மாங்காய் அல்லது புளியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பாரம்பரிய முறையின் படி தயிரை பயன்படுத்துவதே சிறந்தது.

Advertisement

ஓணம் சத்யா விருந்து அவியல் இன்றி நிறைவடையாது. காய்கறிகள் முழுமையாக வெந்திருக்க வேண்டும் ஆனால் குழையக்கூடாது. அவியல் நீர்க்க இருக்க கூடாது ஆனால் தேங்காய் மசாலா எல்லாம் காய்கறியுடன் சேர்ந்து பிரியாமல் இருக்க வேண்டும். அட, அவியல் செய்வது இவ்வளவு கஷ்டம் என்று பயந்துவிடாதீர்கள். சிறுசிறு நுணுக்கங்களை முறையாக பின்பற்றினால் போதும் நீங்களும் அவியல் செய்யலாம். சுவையான அவியல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

கேரளா அவியல் | Kerala style aviyal recipe in tamil

Print Recipe
அவியல் கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற உணவு வகை. கேரளா மட்டுமின்றி அது தென்னிந்தியா முழுவதும் செய்யப்படும் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு. தென்னிந்திய உணவுகளில் கேரளா உணவுகள் தனித்துவமான சுவை கொண்டவையாக உள்ளன. இந்த உணவுகளில் அவியில் மிகவும் புகழ் பெற்ற சைடிஷ்ஷாக உள்ளது. இந்த கேரளா ஸ்டைல் அவியல்
Advertisement
தயார் செய்வதில் சிலர் சிரம படுகின்றனர். வீட்டில் இருந்தே சுவையான கேரளா ஸ்டைலில் அவியல் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். சிலருக்கு இந்த ரெசிபி செய்ய தெரியாமல் கூட இருக்கலாம். அந்த கவலையை போக்க இந்த பதிவு உங்களுக்கு உதவும். அவியல் என்பது பல காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவை நிறைந்த உணவாகும். இதில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய், தேங்காய், தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் அவியலுக்கு தனித்துவமான சுவையையும், மணத்தையும் கொடுக்கின்றன.
Advertisement
Course LUNCH
Cuisine Indian, Kerala
Keyword kerala aviyal
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 25

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 1 கேரட்
  • 1 துண்டு மாங்காய்
  • 1/4 கப் பரங்கிக்காய்
  • 100 கி பீன்ஸ்
  • 1 உருளைக்கிழங்கு
  • 100 கி சேனைக்கிழங்கு
  • 1 வாழைக்காய்
  • 1 முருங்கைக்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • உப்பு தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 கப் தயிர்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • முதலில் எல்லா காய்கறிகளையும் நன்கு கழுவி நீள வாக்கில் ஒரே அளவில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சேனை, கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கை காய், போன்ற காய்கறிகள் வேக கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பதால் முதலில் சேர்த்து வேக விடவும்.
  • ஐந்து நிமிடங்கள் வேக விட்டு, மற்ற எல்லா காய்களையும் சேர்த்து வேக வைக்கவும்.
  • காய்கறிகள் சற்று வெந்ததும் உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து மேலும் மூன்று நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து வேகும் காய்கறிகளில் சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும்.
  • கடைசியாக கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்டைலில் அவியல் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 25kcal | Carbohydrates: 6g | Protein: 7.5g | Fat: 0.2g | Sodium: 69mg | Potassium: 320mg | Fiber: 2.5g | Vitamin A: 835IU | Vitamin C: 5.9mg | Calcium: 33mg | Iron: 5.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

2 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

2 மணி நேரங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

3 மணி நேரங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

7 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

16 மணி நேரங்கள் ago