Advertisement
சைவம்

இட்லி, தோசைக்கு சூப்பரான சேலம் எம்டி சால்னா இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க!

Advertisement

ரோட்டு கடைகளில், பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள கொடுக்கும் சால்னாவில் இருக்கும் சுவை, என்னதான் வீட்டில் முயற்சி செய்தாலும் வராது. அதே சுவையில், அந்த சால்னா குருமாவை நம் வீட்டில் வைத்தால், எப்படி இருக்கும்? நமக்கும் அந்த ரகசிய டிப்ஸ் தெரிந்தால், நம் வீட்டிலேம் செய்து அசத்தலாம் அல்லவா? அந்த வகையில் இந்த பதிவில் சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா செய்வது குறித்து பார்க்கலாம். சால்னா பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, முட்டை பணியாரம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.

கடைகளில் விதவிதமான சால்னா வகைகள் கிடைக்கும், கெட்டி சால்னா, எம்டி சால்னா, வெஜ் சால்னா, சிக்கன் சால்னா, இவற்றைப் போலவே ரோட்டோர கடைகளில் கிடைக்கும் எம்டி சால்னாவின் சுவை அலாதியாக இருக்கும், இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பரோட்டா சால்னா ரொம்ப பிடிக்குமா? அதை உங்கள் வீட்டில் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இன்று செய்து கொடுங்கள். இந்த பரோட்டா சால்னா பரோட்டாவிற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும்.

Advertisement

உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்த நினைத்தால், நிச்சயம் இந்த சால்னாவை முயற்சிக்கலாம். பரோட்டா பலருக்கும் பிடிக்கும். சுடச் சுடச் பரோட்டா செய்வதைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். சில கடைகள் பரோட்டாவிற்கு என்றே பெயர் போனதாக இருக்கும். எந்த உணவாக இருந்தாலும் சைட் டிஷ் மிக முக்கியம். அதுபோல் பரோட்டாவிற்கு சால்னா தான். சிக்கன் குழம்பு வைத்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். இருந்தாலும் எம்டி சால்னா தனி சிறப்பு தான். சிலர் வீட்டுகளில் பரோட்டா செய்வர். சால்னா செய்யத் தெரியாமல் இருக்கலாம். அந்த வகையில் இங்கு எம்டி சால்னா எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

சேலம் எம்டி சால்னா | Salem plain salna recipe in tamil

Print Recipe
ரோட்டு கடைகளில், பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள கொடுக்கும் சால்னாவில் இருக்கும் சுவை, என்னதான் வீட்டில் முயற்சி செய்தாலும் வராது. அதே சுவையில், அந்த சால்னா குருமாவை நம் வீட்டில் வைத்தால், எப்படி இருக்கும்? நமக்கும் அந்த ரகசிய டிப்ஸ் தெரிந்தால், நம் வீட்டிலேம் செய்து அசத்தலாம் அல்லவா? அந்த வகையில் இந்த
Advertisement
பதிவில் சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா செய்வது குறித்து பார்க்கலாம். சால்னா பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, முட்டை பணியாரம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். கடைகளில் விதவிதமான சால்னா வகைகள் கிடைக்கும், கெட்டி சால்னா, எம்டி சால்னா, வெஜ் சால்னா, சிக்கன் சால்னா, இவற்றைப் போலவே ரோட்டோர கடைகளில் கிடைக்கும் எம்டி சால்னாவின் சுவை அலாதியாக இருக்கும், இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
Course Breakfast, dinner
Cuisine Indian, tamil nadu
Keyword plain salna
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 44

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 வர ‌மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கப் புதினா, கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு

அரைக்க :

  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 6 முந்திரி
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை

தாளிக்க :

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு

Instructions

  • முதலில் வெங்காயம், தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, முந்திரி, பொட்டுக்கடலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அதன்பிறகு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • சிறிது நேரம் கழித்து வெங்காயம், தக்காளி சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
  • தக்காளி வதங்கிய பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
  • பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் மூடி போட்டு மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்கவும்.
  • சால்னா கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான சேலம் எம்டி சால்னா தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 44kcal | Carbohydrates: 10g | Protein: 2.4g | Fat: 0.7g | Sodium: 5mg | Fiber: 1.9g | Vitamin C: 15mg | Calcium: 30mg | Iron: 0.5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

34 நிமிடங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

5 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

13 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

14 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

16 மணி நேரங்கள் ago