Advertisement
ஆன்மிகம்

பூஜையறையில் தினமும் கோலம் ‌போடுபவரா ? அப்போ இந்த ‌ஒரு பொருளை மட்டும் கோலமாவில் சேருங்கள்!

Advertisement

நம் வீட்டின் முன்பு சாணம் தெளித்து கோலம் போடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கடும் பனி பொழியும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோலம் போடுவதற்கும் நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது கோலம் போடுவது என்பது நாம் பூமித்தாய்க்கு செய்யும் மரியாதை. கோலம் போடுவது தெய்வங்களை நம் வீட்டிற்குள் வரவழைப்பதற்கு தான்.

கோலம் போடும் போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படிக் கோலாகலமான அழகுடன் இருக்கிறதோ அப்படியே கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஐதிகம். தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும். பூஜை அறையில் கோலங்கள் போட்டு வைப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

Advertisement

நவகிரகங்களுக்கு ஏற்றாற்போல் தினசரி நமது பூஜை அறையில் கோலம் போடுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தினமும் நமது பூஜை அறையில் நவக்கிரக கோலங்கள் போட்டு வந்தால் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகள் இருந்தும் விடுபட்டு நன்மைகள் நிகழ ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட இந்த கோலத்தினை தினமும் நம்மளால் போட இயலவில்லை என்றாலும் கூட வெள்ளிக்கிழமையில் நாம் இதை கடைப்பிடித்து வரலாம். பூஜை அறையில் முறைப்படி கோலம் இட்டு தீபாராதனை காட்டி தெய்வங்களை வழிபட்டு வந்தோமேயானால், நமக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்திலிருந்தும் விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.

பூஜை அறையில் கோலமிடும் பொழுது செய்யக் கூடாத தவறுகள்

வீட்டில் பூஜை அறை என்று தனியாக இருந்தால் தரையில் கோலம் இடலாம். பூஜை அறை தனியாக இல்லை என்பவர்கள் பூஜை அறைக்கு கீழ் தனியாக ஒரு பலகை வைத்து அதன் மேல் தான் கோலமிட வேண்டும்.

பூஜை அறையில் கோலமிட்டால் அதை தினசரி சுத்தம் செய்ய வேண்டும். சிலர் வாரத்திற்கு

Advertisement
ஒருமுறை சுத்தம் செய்வார்கள் ஆனால் அப்படி செய்யக்கூடாது அது தரித்திரத்தை தான் வரவழைக்கும்.

சிலர் பூஜை அறையில் கோலம் போடுவதற்கு கோலமாவு அல்லது சாக்பீஸ் பயன்படுத்துவார்கள். ஆனால், அப்படி செய்யக்கூடாது. பூஜை அறையில் கோலம் போடுவதாக இருந்தால் அரிசி மாவில் தான் கோலம் போட வேண்டும்.

பூஜை அறையில் அரிசி மாவினை கொண்டு கோலமிடுவதால்

Advertisement
நமக்கு இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கி எல்லா விதமான நன்மைகளும் நிகழும் என நம்பப்படுகிறது.

கோலம் போட்டு முடித்தவுடன் அதனை அப்படியே விடாமல் மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

கோலமாவுடன் சேர்க்க வேண்டிய ஒரு பொருள்

ஆன்மீகத்தை பொருத்தவரை பூஜைக்கு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. அதனை புரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டாலே போதும் உறுதியான பலன் கிடைக்கும். பூஜை அறையில் கோலம் போடும் பச்சரிசி மாவுடன் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை பொடி செய்து கலந்து கொண்டாலே போதும். அதனை தொட்டு நாம் கோலம் போடும் பொழுது நமது பூஜை அறையே மனத்தால் நிறைந்து விடும். இதனுடன் வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து பூஜைகள் நாம் மேற்கொள்ளும் பொழுது லட்சுமி கடாட்சம் பெருகும் என சொல்லப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : பூஜையறையில் செய்யக் கூடாத முக்கியமான தவறுகள்! இந்த தவறுகளை மறந்தும் கூட செய்துவிடாதீர்கள்!!

Advertisement
Prem Kumar

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

59 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

5 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

15 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

17 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago