Advertisement
அசைவம்

ருசியான மதுரை மட்டன் கறி தோசை எப்படி செய்வது ? மதுரை சிம்மக்கல் கோனார் கடையில் பெறப்பட்ட ரெசிபி!

Advertisement

எப்போதும் அரிசி மாவு உளுந்து மாவு போட்ட தோசையை சாப்பிட்டு வெறுத்து போனவர்களுக்கு . கொஞ்சம் இப்படி வித்தியாசமாக தோசையை சுட்டு சாப்பிட்டு பார்க்கலாமே. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் ருசி தரும் அந்த மதுரை மட்டன் கறி தோசை  என்ன என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

முன்னெல்லாம் கறி தோசை பற்றி கேள்விப்பட்டதே இல்லை.அண்ணல் தற்போது கறி தோசை பல ஹோட்டல்களில் கிடைக்கிறது இருப்பினும். இந்த கறி தோசை மதுரையில் தான் அதிக பிரபலம்.  சிம்மக்கல் கோனார் கடையில் மதுரை மட்டன் கறி தோசை கிடைக்கும்.. மதுரைக்கு சென்றால் பலரும் அங்கு போய் கண்டிப்பாக சாப்பிடுவார்கள்,அவற்றில் சில முட்டைகள், குருமா போன்றவை அடங்கும்… இது மிகவும் எளிமையான எளிய மதுரை மட்டன் கறி தோசை

Advertisement

மதுரை மட்டன் கறி தோசை மதுரை கோனார் சமூகத்தின் பொக்கிஷமான செய்முறையாகும்.  மதுரை மட்டன் கறி தோசை ஆரோக்கியமான மற்றும் ருசியான காலை உணவு. கறி கைமாவில் மசாலா போல் செய்து. கல் தோசை போல் ஊற்றி மட்டன் கறி மசாலாவை மேலேய் பரப்பி. எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு , எடுத்து சால்னா வுடன் பரிமாற்றப்படும் அற்ப்புதமான மதுரை மட்டன் கறி தோசை. கேட்கும்போதே நாவூறும் இந்த மதுரை மட்டன் கறி தோசைவீட்டிலேயே இந்த செய்முறையில் செய்து அசத்துங்க.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

மதுரை மட்டன் கறி தோசை | Madhurai Mutton Kari Dosa

Print Recipe
மதுரை மட்டன்கறி தோசை மதுரை கோனார் சமூகத்தின் பொக்கிஷமான செய்முறையாகும்.  மதுரை மட்டன் கறி தோசை ஆரோக்கியமான மற்றும் ருசியானகாலை உணவு. கறி கைமாவில் மசாலா போல் செய்து. கல் தோசை போல் ஊற்றி மட்டன் கறி மசாலாவைமேலேய் பரப்பி. எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு , எடுத்து
Advertisement
சால்னா வுடன் பரிமாற்றப்படும்அற்ப்புதமான மதுரை மட்டன் கறி தோசை. கேட்கும்போதே நாவூறும் இந்த மதுரை மட்டன் கறி தோசைவீட்டிலேயேஇந்த செய்முறையில் செய்து அசத்துங்க.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Madhurai Mutton Kari Dosai
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 242

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 200 கிராம் மட்டன் கொத்து கறி
  • 1 கப் தோசை மாவு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 முட்டை
  • 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 3/4 தேக்கரண்டி மல்லி தூள்
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 தேக்கரண்டி சீரக தூள்
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி சோம்பு
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

  • கறியுடன் கால் தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.
  • கறி பஞ்சு போல் வேகவைக்க வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, முட்டையை அடித்து வைக்கவும் (உப்பு தேவையில்லை). வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளிக்கவும்,
  • அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி விட்டு தக்காளி சேர்த்து குழைந்ததும் மிளகு தூள் தவிர மற்ற தூள் வகைகளை சேர்த்து பிரட்டி விடவும்.
  • அதனுடன் வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக கூட்டு பதம் வந்ததும் இறக்கவும் (நீர்க்க இருக்க கூடாது). அடுப்பை சிம்மில் வைத்து தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய ஊத்தப்பமாக ஊற்றவும், அது லேசாக வெந்ததும் ஒரு கரண்டி முட்டை ஊற்றவும்.
  • அதன் மேல் ஒரு கரண்டி கறியை வைத்து பரப்பி விடவும். பிறகு மேல் கால் தேக்கரண்டி மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்..
  • ஒரு நிமிடம் விட்டு எடுத்தால் சுவையான மதுரை கறி தோசை தயார். இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. காரசாரமாக அப்படியே சாப்பிடலாம்

Nutrition

Serving: 500g | Calories: 242kcal | Carbohydrates: 16g | Protein: 12g | Fat: 4g | Sodium: 21.5mg | Potassium: 614mg | Fiber: 0.02g
Advertisement
Prem Kumar

Recent Posts

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

1 மணி நேரம் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

5 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

5 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

5 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

6 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

8 மணி நேரங்கள் ago