Advertisement
அசைவம்

ருசியான மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்து பரோட்டா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

கொத்து பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை. அதுவும் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு. தமிழகத்தில் உள்ள மதுரையை பிறப்பிடமாகக் கொண்ட இவை கேரளாவில் வீச்சு பரோட்டா என்று அழைக்கப்படுகிறது. என்ன தான் தமிழகம் முழுவதும் கொத்து பரோட்டா பிரபலமாக இருந்தாலும் மதுரை மாவட்டத்தில் இதற்கு இருக்கும் மவுசே தனி. கொத்து பரோட்டாவின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் 3 பரோட்டாக்கள் மற்றும் சிக்கன் துண்டுகள் இருந்தால் போதும் இதை மிக எளிதாக செய்து விடலாம். மேலும் வித்தியாசமான முறையில் கொத்து பரோட்டாவாக செய்யலாம்.

மதுரை சிக்கன் கொத்து பரோட்டா | Madurai Chicken Kothu Parotta Recipe In Tamil

Print Recipe
கொத்து பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை அதுவும் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு. தமிழகத்தில் உள்ள மதுரையை பிறப்பிடமாகக் கொண்ட இவை கேரளாவில் வீச்சு பரோட்டா என்று அழைக்கப்படுகிறது. என்ன தான் தமிழகம் முழுவதும் கொத்து பரோட்டா பிரபலமாக இருந்தாலும் மதுரை மாவட்டத்தில் இதற்கு இருக்கும் மவுசே தனி. கொத்து பரோட்டாவின் ஸ்பெஷல் என்ன என்றால் வெறும் 3 பரோட்டாக்கள் மற்றும் முந்தைய நாள் செய்த மீதமுள்ள சிக்கன் துண்டுகள் இருந்தால் போதும் இதை மிக எளிதாக செய்து விடலாம்.
Advertisement
Course dinner
Cuisine Indian, tamilnadu
Keyword kothu parota
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 99.93

Equipment

  • 1 வாணலி
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Ingredients

  • 8 பரோட்டா
  • 1 கப் சிக்கன் கிரேவி
  • 400 கிராம் பொரித்த சிக்கன்
  • 4 முட்டை
  • 200 கிராம் நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • உப்பு தேவையானஅளவு
  • 1 கப் நறுக்கிய தக்காளி
  • 1/4 கப் எண்ணெய்
  • உப்பு தேவையானஅளவு
  • 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி

Instructions

  • முதலில் பரோட்டாவை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வெந்ததும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் இதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கெட்டியானதும், சிக்கனை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • பின்னர் சிக்கன் க்ரேவி சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் பரோட்டா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இதில் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் கொத்து பரோட்டா தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.91g | Protein: 3.49g | Fat: 2.79g | Cholesterol: 5.52mg | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Vitamin A: 295.74IU | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 0.21mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

4 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

15 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

20 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

24 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago