ருசியான மலபார் நண்டு மசாலா சுலபமாக இப்படி ஒரு வாட்டி செஞ்சு பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி ருசி தான்!
கடல் உணவுகள்ள நண்டுகளுக்கு அப்படின்னு ஒரு தனி இடமே இருக்கு. நண்டு மேல விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்காங்க. இந்த நண்டுல கிரேவி செய்தாலும் சரி குழம்பு செய்தாலும் சரி வறுவல் செய்தாலும் சரி ஆம்லெட் செய்தா கூட சாப்பிடுவதற்கு அத்தனை பேர் இருக்காங்க. அதிக அளவு கால்சியம் அமிலங்களு
கடல் உணவுகள்ள நண்டுகளுக்கு அப்படின்னு ஒரு தனி இடமே இருக்கு. நண்டு மேல விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்காங்க. இந்த நண்டுல கிரேவி செய்தாலும் சரி குழம்பு செய்தாலும் சரி வறுவல் செய்தாலும் சரி ஆம்லெட் செய்தா கூட சாப்பிடுவதற்கு அத்தனை பேர் இருக்காங்க. அதிக அளவு கால்சியம் அமிலங்களும் நிறைஞ்சது தான் இந்த நண்டு. நண்டுல ரசம் வச்சு சாப்பிட்டால் அவ்வளவு சுவையா இருக்கும் அது சளிக்கும் காய்ச்சலுக்கும் ரொம்பவே நல்லது.
நண்டுல இருக்கிற வெறும் சதைகளை மட்டும் எடுத்து அதை முட்டையோட சேர்த்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டா அவ்வளவு சுவையா இருக்கும். அப்படி இந்த நண்டுல நம்ம மலபார் ஸ்டைல்ல மசாலா பண்ண போறோம். அந்த மசாலா எவ்வளவு சுவையாக இருக்கும் அப்படின்னு பாத்துக்கலாம். இந்த நண்டு மசாலா எல்லா சாதத்துக்கு கூடயும் சைடு டிஷ்ஷா சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையா இருக்கும். சொல்லப்போனால் ரசத்துக்கும் தயிர் சாதத்துக்கும் அப்படி ஒரு காம்பினேஷனா இருக்கும்.
இந்த நண்டு மசாலா ரொம்ப ஈஸியா வீட்ல இருக்குற பொருளை வைத்து எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி செய்திடலாம் இந்த நண்டு மசாலாவை. இந்த நண்டு மசாலா பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. நீங்க வாங்குற நண்டு உங்களுக்கு கிடைக்காம வீட்ல இருக்கிறவங்க சாப்பிடற அளவுக்கு அப்படி ஒரு டேஸ்டா இருக்கும். வாங்க இந்த நண்டு மசாலா எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.