Advertisement
ஸ்வீட்ஸ்

நாவில் எச்சில் ஊற வைக்கும் தித்திக்கும் மாம்பழம் அல்வா!!!

Advertisement

மாம்பழத்துல அல்வாவா அப்படின்னு எல்லாரும் ஆச்சரியத்தோட பார்ப்பீங்க. ஆனா மாம்பழத்துல செய்ற இந்த அல்வா ரொம்பவே டேஸ்டா இருக்கும். பொதுவா மாங்காய் அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு நம்மளுக்கு மாங்கா ஒரு ஃபேவரிட் ஆனா ஐட்டமா இருக்கும் இந்த மாங்காய் வச்சு நம்ம எக்கச்சக்கமான நம்மளுக்கு புடிச்சமான உணவுகள் செய்யலாம்.

எடுத்துக்காட்டா மாங்காயில் சட்னி மாங்காய் சாதம் மாங்காய் ஊறுகாய் மாங்காய் வடு மாங்காய் தோசை அப்படின்னு மாங்காய் வச்சு நிறைய உணவுகள் செய்யலாம் அது எல்லாமே நமக்கு ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். அதே மாதிரி மாம்பழம் வெச்சும் நம்ம நிறைய உணவுகள் செய்யலாம் மாம்பழ மில்க் ஷேக் மாம்பழத்துல ஜூஸ் , மாம்பழத்துல ஐஸ்கிரீம் அப்படின்னு அவளுக்கு புடிச்சமானதா மாம்பழத்தில் செஞ்சு சாப்பிடலாம்.

Advertisement

அதே மாதிரி நம்ம மாம்பழம் வச்சு அல்வாவும் செய்யலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். பொதுவான அல்வானாலே கோதுமை மாவு கேரட் பிரட் இது வச்சு தான் செய்வோம் ஆனா கொஞ்சம் வித்தியாசமா இன்னைக்கு நம்ம மாம்பழத்துல அல்வா செய்ய போறோம். ஒரு சிலருக்கு மாம்பழம் ரொம்பவே பிடிக்கும் ஆனால் அதை சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டமா நினைப்பாங்க. அவங்களுக்காகவே நீங்க இந்த மாம்பழ அல்வா செஞ்சு கொடுக்கலாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய அல்வா ல மாம்பழம் வச்சு சூப்பரான மாம்பழ அல்வா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

மாம்பழ அல்வா | Mango Halwa Recipe In Tamil

Print Recipe
நம்ம மாம்பழம் வச்சு அல்வாவும் செய்யலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். பொதுவான அல்வானாலே கோதுமை மாவு கேரட் பிரட் இது வச்சு தான் செய்வோம் ஆனா கொஞ்சம் வித்தியாசமா இன்னைக்கு நம்ம மாம்பழத்துல அல்வா செய்ய போறோம். ஒரு சிலருக்கு மாம்பழம் ரொம்பவே பிடிக்கும் ஆனால் அதை சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டமா நினைப்பாங்க. அவங்களுக்காகவே நீங்க இந்த மாம்பழ அல்வா செஞ்சு
Advertisement
கொடுக்கலாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய அல்வா மாம்பழம் வச்சு சூப்பரான மாம்பழ அல்வா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
Course deserts
Cuisine tamil nadu
Keyword mango halwa
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 60

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 3 மாம்பழம்
  • 1 கப் சர்க்கரை
  • 1/2 கப் நெய்
  • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 10 பாதாம்
  • 10 முந்திரி
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

Instructions

  • முதலில் மாம்பழத்திலிருந்து கொட்டையை தனியாக எடுத்துவிட்டு
    Advertisement
    மாம்பழத்தை சிறியதாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • நல்ல ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி பாதாம் மற்றும் முந்திரியை சிறிது சிறிதாக வெட்டி அதில் சேர்த்த நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதே பாத்திரத்தில் நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள மாம்பழ விழுதை சேர்த்து நன்றாக கிளறவும். சோள மாவு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அந்த மாம்பழ கலவையில் ஊற்றவும்.
  • ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் அந்த மாம்பழ கலவையை நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும். இடையிடையே சிறிதளவு நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • இப்பொழுது சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைந்த உடன் மறுபடியும் நினைவு ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி பாதாமை ஒரு தட்டில் நெய் தடவி அதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • நாம் ஊற்றிய நெய் எல்லாம் பிரிந்து மாம்பழ கலவையின் ஓரங்களில் வந்தால் மாம்பழ அல்வா தயார்.
  • இப்பொழுது அதனை நெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு பிறகு தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான மாம்பழ அல்வா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Fat: 0.9g | Saturated Fat: 1g | Sodium: 21mg | Fiber: 7g | Sugar: 0.02g

இதையும் படியுங்கள் : இட்லி, தோசை, சூடான சாதத்திற்கு ஏற்ற மாங்காய் தொக்கு, ஒருமுறை செஞ்சு வச்சுக்கிட்டா 6 மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது!

Advertisement
Ramya

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

2 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

11 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

12 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

13 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

14 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

17 மணி நேரங்கள் ago