Advertisement
அசைவம்

காரசாரமான சுவையில் மீன் முட்டை வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக அனைவரும் மீன் வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் யாரும் மீன் முட்டை வறுவல் செய்து சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள் அதனால் இன்று இந்த ரெசிப்பியை பற்றி தான் காணப் போகிறோம். வார கடைசி நாட்களில் எப்பொழுதும் போல் சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை சமைக்காமல் மீன் முட்டை வாங்கி இதுபோன்று மீன் முட்டை வறுவல் செய்து உங்கள்

இதையும் படியுங்கள் : காரசாரமான மீன் ப்ரைடு ரைஸ் எப்படி செய்வது ?

Advertisement

வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட பரிமாறுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். ஏன் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த மீன் முட்டை வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மீன் முட்டை வறுவல் | Fish Egg Fry Recipe In Tamil

Print Recipe
மீன் வறுவல் அனைவரும் ருசித்திருப்பீர்கள் ஆனால் மீன் முட்டை வறுவல் செஞ்சி சாப்டதுண்டா? இந்த மீன் முட்டை வறுவல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று அதனால் இந்த வார இறுதியில் இந்த மீன் முட்டை வாங்கி இது போன்று செஞ்சி சுவைத்திடுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword fish egg, மீன் முட்டை
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 16 minutes
Servings 3 people
Calories 42

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 200 கிராம் மீன் முட்டை
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • ½ ஸ்பூன் கடுகு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • இஞ்சி சிறிய துண்டு
  • 5 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து மீன் முட்டையை சுத்தம் செய்துகொள்ளவும்.
  • பிறகு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சீரகம், கடுகு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்பு வெங்காயம், காய்ந்த மிளகாய்,போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் சற்று வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், சேர்த்து கிளறவும்.
  • அடுத்து சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  • மீன் முட்டை நன்றாக உதிர் உதிராக வரும் வரை கைவிடாமல் கிளறிவிடவேண்டும்.
  • நன்கு உதிர் உதிராக வந்த பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Nutrition

Calories: 42kcal | Carbohydrates: 0.6g | Protein: 5g | Fat: 3g | Sodium: 240mg
Advertisement
swetha

Recent Posts

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

11 நிமிடங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

1 மணி நேரம் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

5 மணி நேரங்கள் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

15 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

17 மணி நேரங்கள் ago