- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 16 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
பொதுவாக அனைவரும் மீன் வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் யாரும் மீன் முட்டை வறுவல் செய்து சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள் அதனால் இன்று இந்த ரெசிப்பியை பற்றி தான் காணப் போகிறோம். வார கடைசி நாட்களில் எப்பொழுதும் போல் சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை சமைக்காமல் மீன் முட்டை வாங்கி இதுபோன்று மீன் முட்டை வறுவல் செய்து உங்கள்
இதையும் படியுங்கள் : காரசாரமான மீன் ப்ரைடு ரைஸ் எப்படி செய்வது ?
வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட பரிமாறுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். ஏன் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த மீன் முட்டை வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுத்து மீன் முட்டையை சுத்தம் செய்துகொள்ளவும்.
பிறகு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சீரகம், கடுகு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்பு வெங்காயம், காய்ந்த மிளகாய்,போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், சேர்த்து கிளறவும்.
அடுத்து சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
மீன் முட்டை நன்றாக உதிர் உதிராக வரும் வரை கைவிடாமல் கிளறிவிடவேண்டும்.
நன்கு உதிர் உதிராக வந்த பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.






