- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- dinner, LUNCH
குழந்தைகளுக்கு ஃப்ரைட் ரைஸ் என்றாலே அவ்வளவு பிடிக்கும் ஆனால் வழக்கம் போல் சிக்கன் ஃப்ரைடு ரைஸ், எஃக் ப்ரைடு ரைஸ் செய்து சாப்பிட கொடுக்காமல். அதுவும் இந்த ப்ரைடு ரைஸை கடைகளில் வாங்கி தருவது ஆரோக்கியமானது கிடையாது, அதனால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த மீன் ப்ரைடு ரைஸ் செய்து கொடுங்கள்
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் பெப்பர் சில்லி சிக்கன் செய்வது எப்படி ?
உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள், அடுத்த முறையும் இதை செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான மீன் ப்ரைடு ரைஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் பொறித்த மீனின் முள்ளை நீக்கி உதிர்த்து வைக்கவும்.
பிறகு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் முட்டை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு அதில் உதிர்த்த மீனை சேர்த்து வதக்கவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.
காய்கறிகள் பாதி சுருண்டதும் ப்ரைட் ரைஸ் பொடி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் சாஸ் வகைகளையும் சேர்த்து வதக்கவும்.
கலவை நன்கு சுருண்டதும் சத்தத்தை கொட்டி 3 நிமிடங்கள் கிளறவும்.
இப்பொழுது பிஸ் ப்ரைட் ரைஸ் ரெடி.
குறிப்பு: இவை அனைத்து குறைந்த தீயில் வைத்து செய்யவும்.






