Advertisement
உடல்நலம்

கெட்டுப்போன சிறுநீரகத்தை கூட செயல்பட வைக்கும் சித்த மருத்துவத்தின் அற்புத மூலிகை!

Advertisement

மூக்கிரட்டை… மிகச்சாதாரணமாக சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் வளரக்கூடிய மூலிகை இது. மூக்கிரட்டை என்று சொல்லக்கூடிய மூக்கரச்சாரணை சதைப்பற்று இல்லாமல் மெல்லியதாக இருக்கும். அதே தோற்றத்துடன் சதைப்பற்றுடன் காணப்படுவது சாரணைக்கீரை. இதை வட்டச்சாரணத்தி, வெள்ளைச்சாரணை என பல பெயர்களில் அழைப்பார்கள். இதுவும்கூட மிகச் சாதாரணமாக வளர்ந்திருக்கும் ஒரு மூலிகையாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்

மூக்கிரட்டை கீரையை தனியே சமைத்துச் சாப்பிடுவதைவிட கலவைக்கீரைகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. கிராமம், நகரம் என பாகுபாடில்லாமல் வளரக்கூடிய இந்த மூலிகையை சென்னையில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. கலவைக்கீரைகளுடன் சேர்த்து விற்கப்படும் இந்த மூக்கிரட்டையில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. சிறுநீரகக்கோளாறு முதல் மூலக்கோளாறு வரை பல்வேறு பிரச்சினைகளை சரிசெய்யக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்தக்கீரை மிகவும் குறிப்பாக சிறுநீரக செயலிழப்பை சரிசெய்யும்.

Advertisement

சிறுநீரகம் சீர்படுத்தும்

மூக்கிரட்டையின் வேர், இலை மற்றும் தண்டுப்பகுதியை சுத்தம் செய்து நீர் விட்டு கொதிக்கவைத்து ஒரு கசாயம் போன்று குடித்து வரலாம். சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு இதை குடிக்க கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெறுமனே இலைகளை மட்டும் கசாயம் வைக்காமல் சீரகம், பெருஞ்சீரகம், ஓமம் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடிப்பது

Advertisement
நல்லது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலருக்கு இந்த மூக்கிரட்டை கசாயம் வாழ்வு கொடுத்திருக்கிறது.

வாதக்கோளாறு சரியாகும்

மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து வதக்கி பொரியல் செய்து சாப்பிடலாம். அல்லது துவையல் செய்துகூட சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வந்தால் சுவாச பாதிப்புகள்

Advertisement
சரியாகும். மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இந்தக்கீரையை சமைத்துச் சாப்பிடுவதன்மூலம் நிவாரணம் பெறலாம். வாய்வுக்கோளாறு, வாதநோய், சைனஸ் மற்றும் காமாலை நோய்கள்கூட சரியாகும். நீர்க்கட்டு என்று சொல்வார்கள். சிறுநீர் கழிக்க முடியாமல் சிலர் அவதிப்படுவார்கள். சொட்டு சொட்டாக மூத்திரம் வெளியேறும். இதுபோன்று மூத்திரக்கோளாறு உள்ள அனைவருக்கும் இந்த மூக்கிரட்டை நல்லது.

ரத்தசோகை போக்கும்

மூக்கிரட்டையின் வேர் சற்று நீளமாக சிறிய மரவள்ளிக்கிழங்கு போன்று காணப்படும். அதை நீர் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் ரத்தசோகை, சளித்தொல்லை விலகும். இதய பாதிப்பு உள்ளவர்களும்கூட இதேபோல் அருந்தி பலன்பெறலாம். மூக்கிரட்டையின் வேரை குடிநீராக்கி குடித்து வந்தால் வாந்தி எடுப்பதுடன் வயிற்றுக்கழிச்சல் உண்டாகும். இதை உடலில் நமைச்சல், அரிப்பு உள்ளிட்ட தோல் நோய்களால் அவதிப்படுவோர் செய்து பலன்பெறலாம்.

Advertisement
Maria Bellsin

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

2 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

2 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

3 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

6 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

6 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

8 மணி நேரங்கள் ago