- Advertisement -
வீட்டில் காய்கறி இல்லையா? அப்போ இந்த குழம்பு ட்ரை பண்ணி பாருங்க. கரசரமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த குழம்பு செய்து கொடுத்து பாருங்க அப்புறம் சாப்பாடும் காலியாகிவிடும் , குழம்பும் காலியாகிவிடும். ஏனென்றால் எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். இந்த குழம்பை செய்து 5 முதல் 6 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுட சுட
இதையும் படியுங்கள் : ருசியான சீரக குழம்பு இப்படி செய்து பாருங்கள்! இதன் சுவையே தனி!
- Advertisement -
சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். சளி பிடித்தவர்களுக்கு சுட சுட சத்தத்துடன் இந்த குழம்பை ஊற்றி தந்தாள் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
-விளம்பரம்-
மிளகு குழம்பு | Pepper Kulambu Recipe In Tamil
வீட்டில் காய்கறி இல்லையா? அப்போ இந்த குழம்பு ட்ரை பண்ணி பாருங்க. கரசரமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த குழம்பு செய்து கொடுத்து பாருங்க அப்புறம் சாப்பாடும் காலியாகிவிடும் , குழம்பும் காலியாகிவிடும். ஏனென்றால் எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். இந்த குழம்பை செய்து 5 முதல் 6 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுட சுட சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். சளி பிடித்தவர்களுக்கு சுட சுட சத்தத்துடன் இந்த குழம்பை ஊற்றி தந்தாள் உடலுக்கு இதமாக இருக்கும்.
Yield: 4 people
Calories: 120kcal
Equipment
- மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
அரைக்க:
- 1 டேபிள் ஸ்பூன் வர மல்லி
- 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் மிளகு
- 2 வர மிளகாய்
- ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
- 2 கருவேப்பிலை
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
- புளி எலுமிச்சை அளவு
வதக்க தேவையானவை:
- 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- ¼ டீஸ்பூன் கடுகு
- ¼ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ¼ டீஸ்பூன் பெருங்காயப்பொடி
- கருவேப்பிலை ஒரு கொத்து
- 10 சின்ன வெங்காயம் நறுக்கியது
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- 1½ டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
செய்முறை
- முதலில் ஒரு பாண் அடுப்பில் வைத்து வர மல்லி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, வர மிளகாய், சீரகம், கருவேப்பிலை சேர்த்து சீரகம் கருகாமல் மிதமான தீயில் வறுத்து அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து ஆறவிடவும்.
- பிறகு அதே பாணில துருவிய தேங்காய் சேர்த்து ட்ரையாக வறுத்து அதே தடியில் கொட்டி ஆறவிடவும்.
- ஆறியதும் அதனை மிக்சியில் சேர்த்து அத்துடன் ஊறவைத்த புளி சேர்த்து அதே புளி தண்ணீர் தெளித்து விழுதாக நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து பொரிந்து சிவந்து வந்ததும் பெருங்காய பொடி, கருவேப்பிலை சேர்த்து பெரிய விடவும்.
- பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் கண்ணாடி பதம் வர வதக்கிக்கொள்ளவும்.
- வதங்கியதும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்து வர வேண்டும்.
- கொதித்ததும் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து 1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி சேர்த்து எண்ணெய் பிரிந்து வர அளவிற்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- கொதித்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.
Nutrition
Serving: 550G | Calories: 120kcal | Carbohydrates: 11g | Protein: 13g | Fat: 2g | Saturated Fat: 0.5g | Cholesterol: 1mg | Potassium: 311mg | Fiber: 1.2g | Sugar: 0.1g | Iron: 3.1mg