பாசிப்பருப்பு பணியாரம் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! அடிக்கடி செய்து தர சொல்லுவாங்க!
பாசிப்பருப்பு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய ஒரு பருப்பு வகையாகும். பாசிப்பருப்பு ஊற வைத்து அரைத்து செய்யக் கூடிய இந்த பணியாரம் புரத சத்துக்களையும், நார் சத்துகளையும் அள்ளிக் கொடுக்கக் கூடியது. இதில் வெல்லம் சேர்த்து செய்வதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ஆரோக்
பாசிப்பருப்பு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய ஒரு பருப்பு வகையாகும். பாசிப்பருப்பு ஊற வைத்து அரைத்து செய்யக் கூடிய இந்த பணியாரம் புரத சத்துக்களையும், நார் சத்துகளையும் அள்ளிக் கொடுக்கக் கூடியது. இதில் வெல்லம் சேர்த்து செய்வதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய இந்த பச்சை பயறு பணியாரம் ரொம்ப ரொம்ப சுலபமாக சில நிமிடத்தில் செய்து விடலாம்.
பாசிப்பருப்பு இருந்தா இந்த பணியாரம் செஞ்சி பாருங்க. இதுவரைக்கும் இப்படி ஒரு டேஸ்டான பணியாரத்தை சாப்பிட்டதே இல்லைன்னு சொல்வீங்க அந்த அளவுக்கு சுவையுடன் கூடிய ஆரோக்கியமான ரெசிபி.உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும், கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்களும் பச்சை பயரினை தினசரி எடுத்துக் கொள்வது சாலச்சிறந்தது.
உண்ணும் உணவிற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து எது போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் நல்லது என்பவற்றை தெரிந்து கொண்டு எடுத்தாலே உடலில் பெரும்பாலான பிரச்சனைகள் நேராது. இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு ஆரோக்கியமான அதே நேரத்தில் சுவையான ஒரு ரெசிபி பாசிப்பருப்பு பணியாரம் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.