Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ருசியான தஞ்சாவூர் முருங்கைக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

என்னதான் வீட்டில் குழம்பு வைத்து சாப்பிட்டாலும் வெளியில் சாப்பிட்டாலோ அல்லது வேறு யாரு வீட்டில் சாப்பிட்டாலும் அதனுடைய ருசியானது வேற மாறி இருக்கும் என்று தான் சொல்வார்கள். அதேபோல் நம் அனைவருக்குமே காஞ்சிபுரத்தில் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். காஞ்சிபுர மக்கள் வைக்கும் குழம்பாக இருக்கட்டும் அல்லது அங்கு செய்யும் சாதமாக இருக்கட்டும் அனைத்தும் அவ்வளவு சுவையாக இருக்கும். எவ்வளவோ வகை வகையான காய்கறிகள் இருந்தாலும், இந்த முருங்கைக்காயை அடித்துக் கொள்ள வேறு காம்பினேஷனே கிடையாது.

முருங்கை மரத்தில் உள்ள அத்தனையும் மருத்துவ குணம் மிக்கது தான். முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. முருங்கைகாய் உணவு வகைகளை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும். வாரத்தில் குறைந்தது இரு முறை முருங்கைக்காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.

Advertisement

முருங்கைக்காய் சேர்த்து சாம்பார், பொரியல், கார குழம்பு இப்படி வைப்போம். இது இரண்டையும் தவிர்த்து, முருங்கைக்காயை வைத்து ஒரு மசாலா குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது முற்றிலும் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி. புரோட்டீன் சத்து நிறைந்த உணவுகளில் முருங்கைக்காய் ஒன்று. இது பலருடைய ஃபேவரெட் எனலாம். குழம்புடன் முருங்கைக்காய் சேர்த்து சமைக்கும்போது முருங்கைக்காய் வாசனை சாப்பிடும் முன்னரே நாவில் எச்சில் ஊற வைக்கும். இந்த குழம்பை சாதத்திற்கு மட்டுமன்றி இட்லி, தோசைக்குக்கும் சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும்.

தஞ்சாவூர் முருங்கைக்காய் குழம்பு | Murungaikkai Kulambu Recipe In Tamil‌

Print Recipe
எவ்வளவோ வகை வகையான காய்கறிகள் இருந்தாலும், இந்த முருங்கைக்காயை அடித்துக் கொள்ள வேறு காம்பினேஷனே கிடையாது. முருங்கை மரத்தில் உள்ள அத்தனையும் மருத்துவ குணம் மிக்கது தான். முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. முருங்கைகாய் உணவு வகைகளை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும். வாரத்தில் குறைந்தது இரு முறை முருங்கைக்காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும்,
Advertisement
சிறுநீரும் சுத்தம் அடையும். முருங்கைக்காய் சேர்த்து சாம்பார், பொரியல், கார குழம்பு இப்படி வைப்போம். இது இரண்டையும் தவிர்த்து, முருங்கைக்காயை வைத்து ஒரு மசாலா குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Course dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Murungaikkai Kulambu
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 76.4
Advertisement

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 3 முருங்கைக்காய்
  • புளி எலுமிச்சை அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

அரைக்க

  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் பாசிப்பருப்பு
  • 1 டீஸ்பூன் பச்சரிசி
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் தனியா
  • 6 வர ‌மிளகாய்

Instructions

  • முதலில் முருங்கைக்காயை சுத்தம் செய்து சற்று பெரியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து தனியா, அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகாய், மிளகு, வெந்தயம், என அனைத்தையும் சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில், சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் முருங்கைக்காய், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • முருங்கைக்காய் வெந்ததும், புளி தண்ணீரை விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை அணைத்து விடவும்.
  • ஒரு தாளிப்பு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான, பாரம்பரிய தஞ்சாவூர் முருங்கைக்காய் குழம்பு தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 76.4kcal | Carbohydrates: 8.5g | Protein: 5.1g | Fat: 2g | Sodium: 42mg | Potassium: 461mg | Vitamin A: 74IU | Vitamin C: 141mg | Calcium: 30mg | Iron: 0.36mg

இதனையும் படியுங்கள் : கடலைப் பொடி மட்டும் சேர்த்து முருங்கைக் கீரை இப்படி சமைத்தால் போதும்! முருங்கைக்கீரை பிடிக்காதவர்கள் கூட விருப்பி சாப்பிடுவார்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

41 நிமிடங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

58 நிமிடங்கள் ago

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

5 மணி நேரங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

5 மணி நேரங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

5 மணி நேரங்கள் ago

சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…

6 மணி நேரங்கள் ago