என்னதான் வீட்டில் குழம்பு வைத்து சாப்பிட்டாலும் வெளியில் சாப்பிட்டாலோ அல்லது வேறு யாரு வீட்டில் சாப்பிட்டாலும் அதனுடைய ருசியானது வேற மாறி இருக்கும் என்று தான் சொல்வார்கள். அதேபோல் நம் அனைவருக்குமே காஞ்சிபுரத்தில் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். காஞ்சிபுர மக்கள் வைக்கும் குழம்பாக இருக்கட்டும் அல்லது அங்கு செய்யும் சாதமாக இருக்கட்டும் அனைத்தும் அவ்வளவு சுவையாக இருக்கும். எவ்வளவோ வகை வகையான காய்கறிகள் இருந்தாலும், இந்த முருங்கைக்காயை அடித்துக் கொள்ள வேறு காம்பினேஷனே கிடையாது.
முருங்கை மரத்தில் உள்ள அத்தனையும் மருத்துவ குணம் மிக்கது தான். முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. முருங்கைகாய் உணவு வகைகளை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும். வாரத்தில் குறைந்தது இரு முறை முருங்கைக்காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.
முருங்கைக்காய் சேர்த்து சாம்பார், பொரியல், கார குழம்பு இப்படி வைப்போம். இது இரண்டையும் தவிர்த்து, முருங்கைக்காயை வைத்து ஒரு மசாலா குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது முற்றிலும் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி. புரோட்டீன் சத்து நிறைந்த உணவுகளில் முருங்கைக்காய் ஒன்று. இது பலருடைய ஃபேவரெட் எனலாம். குழம்புடன் முருங்கைக்காய் சேர்த்து சமைக்கும்போது முருங்கைக்காய் வாசனை சாப்பிடும் முன்னரே நாவில் எச்சில் ஊற வைக்கும். இந்த குழம்பை சாதத்திற்கு மட்டுமன்றி இட்லி, தோசைக்குக்கும் சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும்.
தஞ்சாவூர் முருங்கைக்காய் குழம்பு | Murungaikkai Kulambu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 3 முருங்கைக்காய்
- புளி எலுமிச்சை அளவு
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
அரைக்க
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 டீஸ்பூன் துவரம் பருப்பு
- 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் பாசிப்பருப்பு
- 1 டீஸ்பூன் பச்சரிசி
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் தனியா
- 6 வர மிளகாய்
செய்முறை
- முதலில் முருங்கைக்காயை சுத்தம் செய்து சற்று பெரியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து தனியா, அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகாய், மிளகு, வெந்தயம், என அனைத்தையும் சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
- இவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில், சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் முருங்கைக்காய், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
- முருங்கைக்காய் வெந்ததும், புளி தண்ணீரை விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு தாளிப்பு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான, பாரம்பரிய தஞ்சாவூர் முருங்கைக்காய் குழம்பு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கடலைப் பொடி மட்டும் சேர்த்து முருங்கைக் கீரை இப்படி சமைத்தால் போதும்! முருங்கைக்கீரை பிடிக்காதவர்கள் கூட விருப்பி சாப்பிடுவார்கள்!