Advertisement
சைவம்

குழம்பு இல்லாத நேரத்துல சாதத்தில் போட்டு சாப்பிட இப்படி ஒரு பருப்பு பொடி செஞ்சு வச்சுக்கோங்க!

Advertisement

பொதுவா வீட்ல இருக்குற தாய்மார்கள் எல்லாரும் அவங்க வீட்டுக்கு தேவையான ஒரு சில பொடிகள் மாவுகள் எல்லாத்தையும் அவங்களே அவங்க கைப்பட கழுவி காயவெச்சு அரைச்சு வச்சுப்பாங்க. அந்த வகையில எல்லார் வீட்டிலேயும் குழம்பு மிளகாய் பொடி சாம்பார் தூள் ரசப்பொடி இட்லி பொடி அப்படின்னு எல்லாமே அரைச்சு வச்சுப்பாங்க. அந்த வகையில எல்லார் வீட்டிலேயும் கண்டிப்பா இருக்க வேண்டிய ஒரு பொடி தான் பருப்பு பொடி.

பொதுவா நம்ம ஆந்திரா ஸ்டைல் ஹோட்டல் எங்க போனாலும் அதுல பருப்பு பொடியும் நெய்யும் கண்டிப்பா இருக்கும். அதோட டேஸ்ட் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில ஹோட்டல்ல கிடைக்கக்கூடிய பருப்பு பொடிய நம்ம வீட்டிலேயே ரொம்ப டேஸ்ட்டா அரச்சு வச்சுக்கலாம். இந்த ஒரு பருப்பு பொடி இருந்தா போதும் நம்ம வீட்ல குழம்பு வைக்க முடியாத நேரத்துல இந்த பருப்பு பொடி கூட கொஞ்சம் நெய் சேர்த்து சாதத்தில் போட்ட பிசைந்து சாப்பிட்டால் ரொம்ப டேஸ்டா இருக்கும்.

Advertisement

இதுக்கு சைடு ஷாம் அப்பளம் மட்டும் பொரிச்சுக்கிட்டாலே ஒரு சூப்பரான லஞ்ச் ரெடியாகிவிடும். எல்லாரும் இனிமேல் ரசப்பொடி இட்லி பொடி மாதிரி இந்த பருப்பு பொடியும் வீட்டில் அரைச்சு வச்சுக்கோங்க ரொம்பவே ஈஸியான இந்த பருப்பு பொடி டேஸ்டுல அட்டகாசமா இருக்கும். ஒரு தடவை அரைச்சு வச்சுக்கிட்டா ஆறு மாசம் வரைக்கும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். நல்லா டைட்டான ஒரு பாக்ஸில் போட்டு க்ளோஸ் பண்ணி வச்சுக்கிட்டா போதும் அதுக்கப்புறம் அது கெட்டு போகாது. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பருப்பு பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

பருப்பு பொடி | Dhal Podi Recipe In Tamil

Print Recipe
பொதுவா நம்ம ஆந்திரா ஸ்டைல் ஹோட்டல் எங்க போனாலும் அதுல பருப்பு
Advertisement
பொடியும் நெய்யும் கண்டிப்பா இருக்கும்.அதோட டேஸ்ட் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில ஹோட்டல்ல கிடைக்கக்கூடியபருப்பு பொடிய நம்ம வீட்டிலேயே ரொம்ப டேஸ்ட்டா அரச்சு வச்சுக்கலாம். இந்த ஒரு பருப்புபொடி இருந்தா போதும் நம்ம வீட்ல குழம்பு வைக்க முடியாத நேரத்துல இந்த பருப்பு பொடிகூட கொஞ்சம் நெய் சேர்த்து சாதத்தில் போட்ட பிசைந்து சாப்பிட்டால் ரொம்ப டேஸ்டா இருக்கும். ஆறு மாசம் வரைக்கும் கெட்டுப்
Advertisement
போகாமல் அப்படியே இருக்கும்.நல்லா டைட்டான ஒரு பாக்ஸில் போட்டு க்ளோஸ் பண்ணி வச்சுக்கிட்டா போதும் அதுக்கப்புறம்அது கெட்டு போகாது.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Dhal Podi
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 128

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் துவரம் பருப்பு
  • 1/4 கப் பாசிப் பருப்பு
  • 1/4 கப் கடலைப்பருப்பு
  • 1/4 கப் பொட்டுக்கடலை
  • 10 காய்ந்த மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 2 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 5 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கடாயில் துவரம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு பாசிப்பருப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்
  • பாசிப்பருப்பு நன்றாக வறுபட்டதும் அதன் பிறகு கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்தவுடன் பொட்டுக்கடலையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சீரகம் மிளகு அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • இறுதியாக பூண்டை தோல் உரிக்காமல் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது அனைத்தையும் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது சுவையான பருப்பு பொடி தயார் இதனுடன் நெய் ஊற்றி பரிமாறினால் சுவையாக இருக்கும்

Nutrition

Serving: 100g | Calories: 128kcal | Carbohydrates: 33.3g | Protein: 14g | Sodium: 35mg | Potassium: 186mg

இதையும் படியுங்கள் : தயிர் சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு பீன்ஸ் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

Advertisement
Ramya

Recent Posts

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

1 மணி நேரம் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

2 மணி நேரங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

2 மணி நேரங்கள் ago

சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 09 மே 2024!

மேஷம் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும்…

5 மணி நேரங்கள் ago

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

15 மணி நேரங்கள் ago