குழம்பு இல்லாத நேரத்துல சாதத்தில் போட்டு சாப்பிட இப்படி ஒரு பருப்பு பொடி செஞ்சு வச்சுக்கோங்க!

- Advertisement -

பொதுவா வீட்ல இருக்குற தாய்மார்கள் எல்லாரும் அவங்க வீட்டுக்கு தேவையான ஒரு சில பொடிகள் மாவுகள் எல்லாத்தையும் அவங்களே அவங்க கைப்பட கழுவி காயவெச்சு அரைச்சு வச்சுப்பாங்க. அந்த வகையில எல்லார் வீட்டிலேயும் குழம்பு மிளகாய் பொடி சாம்பார் தூள் ரசப்பொடி இட்லி பொடி அப்படின்னு எல்லாமே அரைச்சு வச்சுப்பாங்க. அந்த வகையில எல்லார் வீட்டிலேயும் கண்டிப்பா இருக்க வேண்டிய ஒரு பொடி தான் பருப்பு பொடி.

-விளம்பரம்-

பொதுவா நம்ம ஆந்திரா ஸ்டைல் ஹோட்டல் எங்க போனாலும் அதுல பருப்பு பொடியும் நெய்யும் கண்டிப்பா இருக்கும். அதோட டேஸ்ட் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில ஹோட்டல்ல கிடைக்கக்கூடிய பருப்பு பொடிய நம்ம வீட்டிலேயே ரொம்ப டேஸ்ட்டா அரச்சு வச்சுக்கலாம். இந்த ஒரு பருப்பு பொடி இருந்தா போதும் நம்ம வீட்ல குழம்பு வைக்க முடியாத நேரத்துல இந்த பருப்பு பொடி கூட கொஞ்சம் நெய் சேர்த்து சாதத்தில் போட்ட பிசைந்து சாப்பிட்டால் ரொம்ப டேஸ்டா இருக்கும்.

- Advertisement -

இதுக்கு சைடு ஷாம் அப்பளம் மட்டும் பொரிச்சுக்கிட்டாலே ஒரு சூப்பரான லஞ்ச் ரெடியாகிவிடும். எல்லாரும் இனிமேல் ரசப்பொடி இட்லி பொடி மாதிரி இந்த பருப்பு பொடியும் வீட்டில் அரைச்சு வச்சுக்கோங்க ரொம்பவே ஈஸியான இந்த பருப்பு பொடி டேஸ்டுல அட்டகாசமா இருக்கும். ஒரு தடவை அரைச்சு வச்சுக்கிட்டா ஆறு மாசம் வரைக்கும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். நல்லா டைட்டான ஒரு பாக்ஸில் போட்டு க்ளோஸ் பண்ணி வச்சுக்கிட்டா போதும் அதுக்கப்புறம் அது கெட்டு போகாது. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பருப்பு பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

பருப்பு பொடி | Dhal Podi Recipe In Tamil

பொதுவா நம்ம ஆந்திரா ஸ்டைல் ஹோட்டல் எங்க போனாலும் அதுல பருப்பு பொடியும் நெய்யும் கண்டிப்பா இருக்கும்.அதோட டேஸ்ட் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில ஹோட்டல்ல கிடைக்கக்கூடியபருப்பு பொடிய நம்ம வீட்டிலேயே ரொம்ப டேஸ்ட்டா அரச்சு வச்சுக்கலாம். இந்த ஒரு பருப்புபொடி இருந்தா போதும் நம்ம வீட்ல குழம்பு வைக்க முடியாத நேரத்துல இந்த பருப்பு பொடிகூட கொஞ்சம் நெய் சேர்த்து சாதத்தில் போட்ட பிசைந்து சாப்பிட்டால் ரொம்ப டேஸ்டா இருக்கும். ஆறு மாசம் வரைக்கும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.நல்லா டைட்டான ஒரு பாக்ஸில் போட்டு க்ளோஸ் பண்ணி வச்சுக்கிட்டா போதும் அதுக்கப்புறம்அது கெட்டு போகாது.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Dhal Podi
Yield: 4
Calories: 128kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் துவரம் பருப்பு
  • 1/4 கப் பாசிப் பருப்பு
  • 1/4 கப் கடலைப்பருப்பு
  • 1/4 கப் பொட்டுக்கடலை
  • 10 காய்ந்த மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 2 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 5 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு கடாயில் துவரம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு பாசிப்பருப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்
  • பாசிப்பருப்பு நன்றாக வறுபட்டதும் அதன் பிறகு கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்தவுடன் பொட்டுக்கடலையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சீரகம் மிளகு அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • இறுதியாக பூண்டை தோல் உரிக்காமல் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது அனைத்தையும் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது சுவையான பருப்பு பொடி தயார் இதனுடன் நெய் ஊற்றி பரிமாறினால் சுவையாக இருக்கும்

Nutrition

Serving: 100g | Calories: 128kcal | Carbohydrates: 33.3g | Protein: 14g | Sodium: 35mg | Potassium: 186mg

இதையும் படியுங்கள் : தயிர் சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு பீன்ஸ் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்!