Advertisement
சைவம்

இந்த மழைக்கு இதமா ருசியான காளான் வாழைத்தண்டு சூப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

Advertisement

இந்த மழை காலத்துல எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும். ஏதாவது சூடா குடிச்சா நல்லா இருக்கும் அப்படின்ற மாதிரியான ஒரு ண்ணம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி நமக்கு சூடா ஏதாவது குடிக்கணும் அப்படின்னு தோணும்போது சிலர் டீ குடிப்பாங்க சிலர் காபி குடிப்பாங்க ஆனால் நம்மள மாதிரி இன்னும் சிலருக்கு சூடா காரமா ஏதாவது சூப் குடிச்சா நல்லா இருக்கும் அப்படின்ற மாதிரி தோன்றும்.

அந்த மாதிரி சுவையான ஒரு சூப் செய்து ஆரோக்கியமாகவும் எப்படி குடிக்கிறது அப்படின்னு பார்க்க இருக்கிறோம். அதோட இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு சுவையான இந்த சூப்பர் ரொம்ப டேஸ்டாவும் ரொம்ப ஈஸியாவும், ரொம்ப ரொம்ப சுலபமா சட்டுனு செய்திடலாம். அதுக்கு உங்களுக்கு தேவையான பொருட்கள் மட்டும் ரொம்ப ரொம்ப குறைவு நீங்க காளான் வாழைத்தண்டு வச்சிருக்கீங்க அப்படின்னா டக்குனு பொடியா நறுக்கி போட்டு ஒரு சூப்பர் சூப் வச்சு எல்லாருக்கும் கொடுத்தோம்னா எல்லாரும் இந்த மழைக்கு இதமா மிளகுத்தூளை கொஞ்சம் ஜாஸ்தி போட்டுக் கொடுத்தோம்னா சளி பிரச்சனை உள்ளவர்ககளுக்கு சளி தொல்லை மாதிரி எதுவுமே இருக்காது சூப்பரா இருக்கும்.

Advertisement

இந்த சுவையான ஆரோக்கியமான வாழைத்தண்டு காளான் சூப்பர் ரொம்ப ஹெல்தியான டேஸ்டியா செய்து வீட்டுல இருக்க எல்லாருக்கும் கொடுத்துட்டு நம்மள குடிக்கும்போது சும்மா மழையோட குளிருக்கு இதம்மா இந்த சூப் உள்ள போகும்போது சும்மா கத கத கத கதனு இருக்கும் உடம்புக்கு. அந்த மாதிரி சுவையான வாழைத்தண்டு காளான் சூப் செய்து வீட்ல இருக்க எல்லாரும் உங்களை புகழ்ந்த தளிருவாங்க. இந்த சுவையான ஆரோக்கியமிக்க சூப் ரொம்ப ஈஸியாவே டக்குனு செய்து கொடுத்திடலாம். இந்த சுவையான ஆரோக்கியம் மிக்க வாழைத்தண்டு காளான் சூப் எப்படி சுலபமா செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

காளான் வாழைத்தண்டு சூப் | Mushroom Banana stem Soup

Print Recipe
சுவையான ஒரு சூப் செய்து ஆரோக்கியமாகவும் எப்படி குடிக்கிறது அப்படின்னு பார்க்க இருக்கிறோம்.அதோட இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு சுவையான இந்த சூப்பர்
Advertisement
ரொம்ப டேஸ்டாவும் ரொம்ப ஈஸியாவும், ரொம்ப ரொம்ப சுலபமா சட்டுனு செய்திடலாம். அதுக்குஉங்களுக்கு தேவையான பொருட்கள் மட்டும் ரொம்ப ரொம்ப குறைவு நீங்க காளான் வாழைத்தண்டு வச்சிருக்கீங்க அப்படின்னா டக்குனு பொடியா நறுக்கி போட்டு ஒரு சூப்பர் சூப் வச்சு எல்லாருக்கும் கொடுத்தோம்னா எல்லாரும் இந்த மழைக்கு இதமா மிளகுத்தூளை கொஞ்சம் ஜாஸ்தி போட்டுக் கொடுத்தோம்னா சளி பிரச்சனை உள்ளவர்ககளுக்கு சளி தொல்லை மாதிரி எதுவுமே இருக்காது சூப்பரா இருக்கும்.
Course Soup
Cuisine tamil nadu
Keyword Mushroom Banana Stem Soup
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 7 minutes
Servings 4
Calories 162

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் வாழைத்தண்டு
  • 1 கப் காளான்
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 ஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 ஸ்பூன் கரமசாலா
  • 1/4 ஸ்பூன் சீரகதூள்
  • 1/4 ஸ்பூன் சோம்பு தூள்
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • 1 ஸ்பூன் சோளமாவு
  • கொத்தமல்லி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வாழைத்தண்டையும் காளானையும் பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி கல்லில் பச்சைமிளகாய் , பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கிய காளான் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.பின் அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள் , சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
     
  •  பிறகு அதில் சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துநன்றாக கலந்து விட வேண்டும். பிறகு வாழைத்தண்டும் காளானும் வேகுவதற்கு தேவையான அளவுதண்ணீர் உப்பு சேர்த்து நன்றாக சூப்பை கொதிக்க வைக்க வேண்டும்.
  •  சூப் நன்றாக கொதித்து வாழைத்தண்டும் காளானும் வெந்தபிறகு அதில் சோளமாவை சிறிது நீரில் கலந்து சேர்த்தால் சூப் கட்டியாகி விடும்.
  • இறுதியாக அதில் மிளகுத்தூள் கொத்தமல்லி இலைகள் தூவி நன்றாக கலந்து விட்டு சூடாக பரிமாறினால் மழைக்கிதமான சுவையான சூப் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 162kcal | Carbohydrates: 16g | Protein: 7.7g | Sodium: 274mg | Potassium: 242mg

இதையும் படியுங்கள் : இனி சப்பாத்தி ரோல் இப்படி செய்து பாருங்க ஒரு ரோல் கூட மீதம் வைக்கமல் சாப்பிடுவாங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

5 மணி நேரங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

9 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

9 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

9 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

20 மணி நேரங்கள் ago