Advertisement
அசைவம்

மட்டன் மிளகு வறுவல் இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டீங்கனா, திரும்ப திரும்ப செய்யும் அளவுக்கு செம்ம ருசியா இருக்கும்!

Advertisement

மட்டன் மீது விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். மட்டனில் அதிக அளவு இரும்பு சத்து , விட்டமின் பி12 , செலினியம் இன்னும் பல சத்துகள் இருப்பதனால் மட்டுமல்லாது அதோட சுவைக்காகவும் நிறைய பேரு மட்டன் மேலே விருப்பமுள்ளவர்களாக இருப்பாங்க. காரணம் இறைச்சி அப்படின்னு சொன்னாலே சிக்கன் வாங்கி சாப்பிடுறவங்க மீன் வாங்கி சாப்பிடுறவங்களை விட மட்டன் வாங்கி சாப்பிடறவங்களோட அளவு மிகவும் அதிகம்.

இந்த மட்டனில்  அதிக அளவு இரும்புசத்தும் இருக்கின்றது. இந்த இரும்புசத்து உடலுக்கு அதிக அளவு இரத்த விருத்திக்கு உபயோகப்படுகிறது. மட்டன் நம்ம அன்றாட உணவுகளை அதை செய்து கொள்ள ஆரம்பிச்சாச்சு. என்னதான் மட்டனில் குழம்பு வச்சு சாப்பிட்டாலும் பிரியாணி பண்ணி சாப்பிட்டாலும் அந்த மட்டனில் சைடிஸ் அப்படிங்கிற ஒரு விஷயம் தான் நிறைய பேருக்கு ரொம்பவே பிடிக்கும்.

Advertisement

ஒரு ஒரு விதமான வறுவல், தொக்குகள்,  பொரியல்கள் அப்படின்னு விதவிதமா இந்த மட்டன் பாகங்களை வச்சு பலவிதமான உணவு பொருட்கள் வந்துட்டு இருக்கு அதனால மட்டன் மேலே இருக்கிற விருப்பம் இன்னும் அதிகமாயிட்டு தான் இருக்கு காரணம் அதோடு சுவையை நம்ம மேலும் மேலும் சுவை கூட்டிக்கொண்டே இருக்கிறோம்.

பலவித பொருட்களை வித்தியாச வித்தியாசமான கலவையில கலந்து ரொம்பவே சுவையா மட்டன் உணவுகள் செய்து சாப்பிடுவது நிறைய பேருக்கு பிடிக்கும். அப்படித்தான் இன்னைக்கு நம்ம ரொம்ப சுவையா இந்த மட்டனில் ஒரு கார சாரமான மிளகு வறுவல் செய்ய போறோம். இன்று மட்டனில் மிளகு வறுவல் செய்து சாப்பிட இருக்கிறோம். இந்த மட்டன் மிளகு வறுவல் மிகவும் சுவையுடையதாக சுலபமாக எப்படி வீட்டில் தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மட்டன் மிளகு வறுவல் | Mutton Pepper Fry Recipe In Tamil

Print Recipe
பல வித பொருட்களை வித்தியாச வித்தியாசமான கலவையில கலந்து ரொம்பவே சுவையா மட்டன் உணவுகள் செய்து சாப்பிடுவதுநிறைய பேருக்கு பிடிக்கும்.
Advertisement
அப்படித்தான் இன்னைக்கு நம்ம ரொம்ப சுவையா இந்த மட்டனில்ஒரு கார சாரமான மிளகு வறுவல் செய்ய போறோம். இன்று மட்டனில் மிளகு வறுவல் செய்து சாப்பிடஇருக்கிறோம். இந்த மட்டன் மிளகு வறுவல் மிகவும் சுவையுடையதாக சுலபமாக எப்படி வீட்டில்தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Course Fry
Cuisine tamil nadu
Keyword Mutton Pepper Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 354
Advertisement

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ மட்டன்
  • 10 பல் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • 2 ஸ்பூன் மிளகு தூள்
  • 1 ஸ்பூன் சீரகத் தூள்
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கழுவி வைத்துள்ள  மட்டனில் சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு  போட்டு பிசறி தனியாக வைத்து விட வேண்டும்.
  • ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு  மஞ்சள் தூள் போட்டு வைத்துள்ளமட்டனை அலசி விட வேண்டும். சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனில் சீரகத்தூள், மிளகுத்தூள்,உப்பு மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக பிசறி வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ளபூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் மட்டனை சேர்த்து நன்றாக கலந்து விடவும்..மட்டன் தண்ணீர் விடும் என்பதால் தண்ணீர் சேர்க்க வேண்டாம் மட்டனை கிளறிவிட்டு மூடிபோட்டு வேக வைக்கவும்.
  • அவ்வப்போது மூடியை திறந்து நாளை கிளறி விட்டுக் கொண்டிருக்கவும். தண்ணீர் வற்றி மட்டன் நன்றாக வெந்த பிறகு மேலே கொத்தமல்லி தழைகளை தூவி கிளறி விடவும்.
  • அவ்வளவுதான் பரிமாறுவதற்கு சுவையான ருசியான மட்டன் மிளகு வறுவல் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Sugar: 2.3g | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மட்டன் கபாப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

3 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

14 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

20 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

23 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

23 மணி நேரங்கள் ago