Advertisement
சட்னி

ருசியான மைசூர் ரோட்டு கடை சட்னி இப்படி செய்து பாருங்க 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

இன்று நாம் இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் ஒரு சட்னி ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று மைசூர் ரோட்டு கடை சட்னி தான் செய்து பார்க்க போகிறோம். இந்த சட்னியை வெறும் ஐந்து நிமிடத்தில் எளிதாகவும் வேகமாகவும் செய்து விடலாம் எந்த பொருட்களையும் நாம் கடாயில் வதக்க தேவையில்லை. இதனால் உங்களுக்கு உடனடியாக எதுவும் சட்னி செய்ய வேண்டி

இருந்தால் கண்டிப்பாக இந்த மைசூர் ரோடு கடை சட்னி செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சட்னியாக மாறிபோகும் அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்களை அடுத்த முறை இதுபோல் செய்ய சில கேட்பார்கள் அதனால் இன்று இந்த மைசூர் ரோட்டு கடை சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

Advertisement
Advertisement
5222" class="wprm-recipe-container" data-recipe-id="5222" data-servings="4">

மைசூர் ரோட்டு கடை சட்னி | Mysore Road Side Shop Chutney Recipe in Tamil

Print Recipe
இந்த சட்னியை வெறும் ஐந்து நிமிடத்தில் எளிதாகவும் வேகமாகவும் செய்து விடலாம் எந்த பொருட்களையும் நாம் கடாயில் வதக்க தேவையில்லை. இதனால் உங்களுக்கு உடனடியாக எதுவும் சட்னி செய்ய வேண்டி இருந்தால் கண்டிப்பாக இந்த மைசூர் ரோடு கடை சட்னி செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சட்னியாக மாறிபோகும் அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்களை அடுத்த முறை இதுபோல் செய்ய சில கேட்பார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword chutney, சட்னி
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 10 minutes
Servings 4 people
Calories 85

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Ingredients

சட்னி அரைக்க

  • 5 பச்சை மிளகாய்
  • 4 பல் பூண்டு
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • ½ கப் வேர்கடலை
  • ¼ கப் பொட்டு கடலை
  • 1  புளி சிறிய எலுமிச்சை அளவு
  • கொத்தமல்லி சிறிது
  • கல் உப்பு தேவையான அளவு

சட்னி தாளிக்க

  • 2 tbsp எண்ணெய்
  • 1 tsp கடலை பருப்பு
  • 1 tsp உளுந்த பருப்பு
  • ½ tsp சீரகம்
  • 1 tsp கடுகு
  • 2 வர மிளகாய்

Instructions

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொண்டு அதில் நறுக்கிய ஐந்து பச்சை மிளகாய், நான்கு பல் பூண்டு, நறுக்கிய ஒரு
    Advertisement
    பெரிய வெங்காயம், அரை கப் வேர்க்கடலை, கால் கப் பொட்டுக்கடலை, ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளி, சிறிது கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
  • பின் மறுபடியும் இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு சட்னியாக அரைத்துக் கொண்டு. பின் அரைத்த சட்னியை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் சிறிய அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் கடுகு, இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளுங்கள்.
  • பின் நாம் செய்த தாளிப்பை அரைத்து வைத்திருக்கும் சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறுங்கள் அவ்வளவுதான் சுவையான மைசூர் ரோட்டு கடை சட்னி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 300gram | Calories: 85kcal | Carbohydrates: 43g | Protein: 21g | Fat: 1g | Saturated Fat: 1.2g | Cholesterol: 0.2mg | Sodium: 2mg | Potassium: 154mg | Fiber: 1g | Sugar: 0.4g | Calcium: 6mg

இதையும் படியுங்கள் : சுவையான கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி ?

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

5 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

6 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

7 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

11 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

11 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

11 மணி நேரங்கள் ago