Advertisement
ஸ்நாக்ஸ்

டீ, காபியுடன் சாப்பிட ஸ்நாக்ஸாக பாலக் முறுக்கு இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு இதன் ருசியே தனி!!

Advertisement

பொதுவாக முறுக்கு என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ். பல வகை முறுக்கு இருக்கிது அதில் வெண்ணைய் முறுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. பொதுவாக பண்டிகை காலங்களில் தயாரிக்கப்படும் மொறுமொறுப்பான சுவையான பலகாரம் ஆகும். முறுக்கு நம் பாரம்பரிய பலகாரத்தில் ஒன்று. பலருக்கு பிடித்த ஒரு நொருக்கு தீனி என்றால் அது முறுக்கு தான்.

இதனையும் படியுங்கள் : பாரம்பரிய சுவை மிகுந்த காரைக்குடி கை முறுக்கு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

பாலக் முறுக்கு சுவையான ஸ்நாக்ஸ் என்பதோடு மட்டுமல்லாமல், அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அதனை கடையில் வாங்கி சாப்பிடுவதை விட நாம் வீட்டிலேயே தயாரித்து ருசிக்கலாம். கீரை என்றாலே குழந்தைகள் முகத்தைச் சுளிப்பார்கள் சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் உடனே முறுக்கை காலி பண்ணி விடுவார்கள்.

பாலக் முறுக்கு | Palak Murukku Recipe in Tamil

Print Recipe
பொதுவாக முறுக்கு என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ். பல வகை முறுக்கு இருக்கிது அதில் வெண்ணைய் முறுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. பொதுவாக பண்டிகை காலங்களில் தயாரிக்கப்படும் மொறுமொறுப்பான சுவையான பலகாரம் ஆகும். முறுக்கு நம் பாரம்பரிய பலகாரத்தில் ஒன்று. பலருக்கு பிடித்த ஒரு நொருக்கு தீனி என்றால் அது முறுக்கு தான்.
Advertisement
பாலக் முறுக்கு சுவையான ஸ்நாக்ஸ் என்பதோடு மட்டுமல்லாமல், அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
Course snacks
Cuisine Indian
Keyword murukku
Prep Time 15 minutes
Advertisement
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 5 People
Calories 140

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Ingredients

  • 1 கப் இடியாப்ப மாவு
  • 1 கைப்பிடி பாலக் கீரை
  • 1 டீஸ்பூன் வெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் எள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  • எண்ணெய் தேவையானஅளவு
  • உப்பு தேவையானஅளவு

Instructions

  • முதலில் கீரையை சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள் எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  • அதனுடன் அரைத்த பாலக் கீரையும் சேர்த்து நன்றாக பிசையவும் தண்ணீர் போதவில்லை என்றால் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை ஒரு ஸ்டார் அச்சில் போட்டு வட்டமாக சுற்றி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  • எண்ணையில் சலசலப்பு அடங்கியதும் எடுத்து விடவும். ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் 15 நாட்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும்.
  • இப்போது சூடான சுவையான சத்தான பாலக்கீரை முறுக்கு தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 140kcal | Carbohydrates: 9g | Protein: 14g | Fiber: 14g | Vitamin A: 141IU | Vitamin C: 16.4mg | Calcium: 90mg

Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

4 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

10 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

13 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

14 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

18 மணி நேரங்கள் ago