Advertisement
சைவம்

தித்திக்கு சுவையில் பனங்கிழங்கு பாயாசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!!

Advertisement

பனங்கிழங்கினை கொண்டு எண்ணற்ற உணவுப் பண்டங்களை நமது முன்னோர்கள் தயாரித்து வந்தார். அந்த வரிசையில் இன்று நாம் பனங் கிழங்கு பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பனங்கிழங்கினை பயன்படுத்துவதின் மூலம் நீரிழிவு வியாதியில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் நுங்கு பாயசம் இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!

Advertisement

எனவே வளரும் குழந்தைகளுக்கு இந்த பனங்கிழங்கு உணவுப் பொருட்களை கொடுத்து வருவதால் எண்ணற்ற பயன்கள் ஏற்படும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. பனங்கிழங்கின் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும். மிகவும் சுவையான வித்தியாசமான ஒரு பாயாசம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்.

பனங்கிழங்கு பாயாசம்| Panakilangu Payasam Recipe in Tamil

Print Recipe
பனங்கிழங்கினை கொண்டு எண்ணற்ற உணவுப் பண்டங்களை நமது முன்னோர்கள் தயாரித்து வந்தார். அந்த வரிசையில் இன்று நாம் பனங் கிழங்கு பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பனங்கிழங்கினை பயன்படுத்துவதின் மூலம் நீரிழிவு வியாதியில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். எனவே வளரும் குழந்தைகளுக்கு இந்த பனங்கிழங்கு உணவுப் பொருட்களை கொடுத்து வருவதால் எண்ணற்ற பயன்கள் ஏற்படும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. பனங்கிழங்கின் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
Course sweets
Cuisine Indian
Keyword Payasam
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Advertisement
Servings 4 People
Calories 374

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

Ingredients

  • 6 பனங்கிழங்கு
  • 300 கிராம் வெல்லம்
  • 2 டீஸ்பூன் பச்சரிசி
  • 1 கப் தேங்காய்
  • 200 மிலி பால்
  • 10 முந்திரி
  • 2 ஏலக்காய்
  • 3 டீஸ்பூன் நெய்

Instructions

  • முதலில் பனங்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
    Advertisement
  • அதன் பின்னர் ஊறவைத்த பச்சரிசி தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் வெல்லத்தை உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உடைத்து வைத்த வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு பாகு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி தேங்காய் பால் அரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கிளற வேண்டும். அதன் பின் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு கிளற வேண்டும். பசைபோல் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • அதன் பின் ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த பனங்கிழங்கு சாறை ஊற்றி நன்கு கிளற வேண்டும். அதன்பின் வெல்லப்பாகை ஊற்றி கிளற வேண்டும்.
  • பின்பு வேறெரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதை பாயாச கலவையில் சேர்த்து கிளற வேண்டும். ஏலக்காய் இரண்டையும் தட்டி போட வேண்டும். முந்திரி போட்டபின் இரண்டு நிமிடம் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
  • சுவையான அட்டகாசமான ருசியில் பனங்கிழங்கு பாயாசம் ரெடி.

Nutrition

Serving: 500g | Calories: 374kcal | Carbohydrates: 85.4g | Fat: 0.01g | Potassium: 469mg | Fiber: 4.65g | Sugar: 3.24g | Calcium: 32.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இந்த கோடை வெயிலுக்கு இதமாக உங்கள் குழந்தைகளுக்கு குளு குளு நுங்கு கீர் செய்து கொடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

26 நிமிடங்கள் ago

திருமண விழாக்களில் முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள்

ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…

2 மணி நேரங்கள் ago

வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

5 மணி நேரங்கள் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

15 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

16 மணி நேரங்கள் ago