- Advertisement -
ஹோட்டலில் சாப்பிடப்படும் பன்னீர் கிரேவி தனி டேஸ்ட் தான் அதுவும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
-விளம்பரம்-
அந்த பன்னீர் கிரேவி பலருக்கும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்து அதிகம் சாப்பிட்ருக்க மாட்டீங்க. ஏனென்றால் பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது.
- Advertisement -
இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் வீட்டிலே பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தி, இட்லி, தோசை, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
பன்னீர் கிரேவி | Paneer Gravy Recipe In Tamil
ஹோட்டலில் சாப்பிடப்படும் பன்னீர் கிரேவி தனி டேஸ்ட் தான் அதுவும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.அந்த பன்னீர் கிரேவி பலருக்கும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்து அதிகம் சாப்பிட்ருக்க மாட்டீங்க. ஏனென்றால் பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது.இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் வீட்டிலே பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தி, இட்லி, தோசை, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
Yield: 4 people
Equipment
- 2 பேன்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் தேவையான அளவு
- 4 பட்டை
- 5 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 1 நச்சத்திர சோம்பு
- ½ ஸ்பூன் கல்பாசி
- 2 பிரிஞ்சி இலை
- 1½ டேபிள் ஸ்பூன் வர மல்லி
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- 4 வர மிளகாய்
- ½ டீஸ்பூன் கசகசா
- 10 முந்திரி
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 தக்காளி நறுக்கியது
- உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க:
- 200 கிராம் பன்னீர்
- 1 டீஸ்பூன் பட்டர்
- கறிவேப்பிலை
- ½ கப் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ டீஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள்
- 1 குடைமிளகாய் நறுக்கியது
- ½ கப் தேங்காய் பால்
- கொத்தமல்லி இழை கொஞ்சம்
- 1 ஸ்பூன் நெய்
செய்முறை
செய்முறை:
- முதலில் ஒரு பேனில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, கல்பாசி, நச்சத்திர சோம்பு, பிரிஞ்சி இழை, வர மல்லி, சோம்ம்பு, சீரகம், மிளகு, வரமிளகாய் சேர்த்து மிதமான தீயில் பாதி அளவு வறுபட்டதும், கசகசா, முந்திரி பருப்பு சேர்த்து கருகாமல் வறுக்கவும்.
- பக்குவமாக வறுத்ததும், அதனை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
- ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அதே பேனில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், வெகும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- பிறகு தக்காளி சேர்த்து நன்கு கொழைய வதக்கவும். அதனை மற்றொரு மிக்சி ஜாரில் சேர்த்து இத்தனையும் அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து பன்னீர் கடினமாக இருந்தால் சுடுதண்ணீரில் சிறிதுநேரம் போட்டு ஊறவைக்கவும் வைக்கவும்.
- பிறகு ஒரு பேனில் எண்ணெய் சேர்த்து அதனுடன் பட்டர் சேர்த்து காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும், காஸ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து பாதி அளவு வெந்ததும் அரைத்த தக்காளி, வெங்காயம், விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா திக்காக மாறும் வரை வதக்கவும்.
- மாறியதும் அரைத்து வைத்த மசாலா விழுதை இதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து 4 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.
- மசாலா கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து, 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
- எண்ணெய் பிரிந்து வந்ததும் பன்னீர் தண்ணீரை வடித்து சேர்த்துக்கொள்ளவும். 3 நிமிடம் வேக விடவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி, நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.
- இப்பொழுது சுவையான பன்னீர் கிரேவி தயார்.