Advertisement
சட்னி

ரசம் சாதம், சாம்பார் சாதமுடன் சாப்பிட ருசியான கிராமத்து பருப்பு துவையல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

Advertisement

எல்லா வகையான கலவை சாதத்திற்கும் ரொம்பவும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த பருப்பு துவையல் செய்வதும் ரொம்பவும் எளிதாக இருக்கும். தேங்காய் எல்லாம் போட்டு செய்வதால், இதன் ருசி அபரிமிதமாக இருக்கும். பத்து நிமிடத்தில் செய்யும் சூப்பரான ஒரு பருப்பு துவையல் ரெசிபி தான் இது. நாம்  செய்யக்கூடிய பருப்பு சாம்பார் விட இதன் சுவை முற்றிலும் வித்தியாசமானது. வீட்டில் இருக்கும் மசாலா பொருட்களை வைத்தே இந்த சுவையான சூப்பரான பருப்பு துவையல் எளிதாக செய்யலாம்.

 கலவை சாதம் மட்டும் அல்லாமல் டிபன் வகைகளுக்கும், சூடான சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள அவ்வளவு அருமையாக இருக்கும், இந்த பருப்பு துவையல் எப்படி எளிதாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.பெரும்பாலும் பருப்பு  வைத்து சாம்பார் , கூட்டுத் தான் செய்வார்கள் ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்… வாங்க ரெசிபியை பார்க்கலாம்.

Advertisement

பருப்பு துவையல் | Paruppu Thuvayal Recipe In Tamil

Print Recipe
எல்லா வகையான கலவை சாதத்திற்கும் ரொம்பவும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய
Advertisement
இந்த பருப்பு துவையல்செய்வதும் ரொம்பவும் எளிதாக இருக்கும். தேங்காய் எல்லாம் போட்டு செய்வதால், இதன் ருசிஅபரிமிதமாக இருக்கும். பத்து நிமிடத்தில் செய்யும் சூப்பரான ஒரு பருப்பு துவையல் ரெசிபிதான் இது. நாம்  செய்யக்கூடிய பருப்பு சாம்பார்விட இதன் சுவை முற்றிலும் வித்தியாசமானது. வீட்டில் இருக்கும் மசாலா பொருட்களை வைத்தேஇந்த சுவையான சூப்பரான பருப்பு துவையல் எளிதாக செய்யலாம்.
Advertisement
வாங்க ரெசிபியைபார்க்கலாம்.
Course chutney, Side Dish
Cuisine tamilnadu
Keyword Paruppu Thuvayal
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/2 கப் துவரம்பருப்பு
  • 2 டீஸ்பூன் தேங்காய்
  • 1  சிவப்பு மிளகாய்
  • 5 மிளகு
  • 1 பல் பூண்டு
  • 3 கறிவேப்பிலை
  • உப்பு சுவைக்கேற்ப

Instructions

  • ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, பருப்பு, தேங்காய், சிவப்பு மிளகாய், மிளகு, கறிவேப்பிலைமற்றும் பூண்டு ஆகியவற்றை வறுக்கவும்.
  • பருப்பு பொன்னிறமாக மாறும் வரை இதை வறுக்கவும். பருப்பை கருக்கிவிட கூடாது. ஸ்டோவை  அணைத்து, ஒரு தட்டுக்கு மாற்றவும், அதை குளிரவிடவும்.
  • கலவை ஆறியதும் உப்பு சேர்த்து மிகக் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி கொரகொரப்பாக அரைக்கவும். சூடான சாதம், நல்லெண்ணெய் உடன் பரிமாறவும்

Nutrition

Serving: 400g | Carbohydrates: 76g | Protein: 10g | Fat: 1g | Sodium: 4mg | Potassium: 107mg | Fiber: 2.7g
Advertisement
Prem Kumar

Recent Posts

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

1 மணி நேரம் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

4 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

4 மணி நேரங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

5 மணி நேரங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

9 மணி நேரங்கள் ago