வீட்டில் பூஜை செய்யும் போது மறந்து கூட இந்த தவறுகளை செய்து வீடாதீர்கள்!
அனைவரது வீடுகளில் அவரவருக்கென்று தனியாக அறை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பான முறையில் பூஜை அறை வைத்திருப்பார்கள். அப்படி பூஜை அறை வைக்க வசதி இல்லாமல் இருப்பவர்கள் கூட வீட்டிலேயே ஓரிடத்தில் பூஜை செய்வதற்கென்று அவசியம் ஒர் இடத்தை ஒதுக்கி வைத்திருப்பார்கள். நீங்கள் தினமும் கோவில் செல்ப
அனைவரது வீடுகளில் அவரவருக்கென்று தனியாக அறை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பான முறையில் பூஜை அறை வைத்திருப்பார்கள். அப்படி பூஜை அறை வைக்க வசதி இல்லாமல் இருப்பவர்கள் கூட வீட்டிலேயே ஓரிடத்தில் பூஜை செய்வதற்கென்று அவசியம் ஒர் இடத்தை ஒதுக்கி வைத்திருப்பார்கள். நீங்கள் தினமும் கோவில் செல்பவராக இருந்தாலும், கோவிலுக்கு செல்லும் முன் வீட்டில் பூஜை அறையை தயார் செய்து, வீட்டின் முத்தம் கூட்டி தெளித்து பின் வீட்டில் பூஜை முடித்துவிட்டு தான் கோவில் செல்ல வேண்டும் என சாஸ்திரங்களை கூறுகிறது. அப்படிப்பட்ட பூஜை அறையில் நாம் செய்யக்கூடாத சிறு சிறு தவறுகளை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
பூஜை அளையில் நாம் சாமிக்கு சாதத்தை பிரசாதமாக வைக்கும் பொழுது பச்சரிசியில் வடித்து தயார் செய்த சாதத்தை மட்டும் தான் பிரசாதமாக வைக்க வேண்டும் வேறு எந்த சாப்பாட்டு அரிசியையும் உபயோகிக்க கூடாது.
நாம் சாமிக்கு தேங்காய் உடைக்கும் பொழுது முதலில் தேங்காயை சரிவர உடைத்து விட்டு அதன் பின் தான் அதன் மேல் இருக்கும் குடிமியை பிய்த்து எடுக்க வேண்டும். பின் நாம் உடைக்கும் தேங்காய் வழுக்கையாக மற்றும் கோணலாக இருந்தால் அந்த தேங்காயை பயன்படுத்தக் கூடாது. மேலும் தேங்காய் அழுகி இருக்கும் பட்சத்தில் வேறு தேங்காயை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பூஜை அறையில் கோலம் போட்டு, விக்கிரங்களை சரியான முறையில் அமைத்து, ஊதுபத்தி ஏற்றி பின் தீபம் ஏற்றி அர்ச்சனை எல்லாம் செய்து முடித்துவிட்டு பின் தான் கடைசியாக கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.
நாம் வீட்டில் உள்ள பூஜை அறையை தயார்படுத்தி பூஜை செய்வதற்காக வைக்கும் பொருள்களில் வெற்றிலையும் வாழைப்பழமும் என இரண்டும் அடங்கும். இந்த இரண்டு பொருட்களிலும் அதன் காம்பு பகுதியோடு இருப்பது அவசியம் மேலும் நாம் வைக்கும் வெற்றிலையில் எக்காரணம் கொண்டும் சுண்ணாம்பு தடவி இருக்கக் கூடாது.