Advertisement
சைவம்

சப்பாத்திக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு சப்பாத்தி கூட சாப்பிட வாங்க!

Advertisement

பொதுவான சப்பாத்திக்கு நல்லா சைடிஷ் வைத்து சாப்பிடணும் அப்படின்னு நினைப்போம். இந்த வகையில பட்டர் சிக்கன், பன்னீர் பட்டர் மசாலா, உருளைக்கிழங்கு மசாலா, தக்காளி தொக்கு, தக்காளி குருமா அப்படின்னு நிறைய சைட் டிஷ் வச்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்ப நம்ம வைக்கப் போற இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா ஒரு தடவ செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க வீட்ல எப்போ சப்பாத்தி செஞ்சாலும் இந்த மசாலா தான் செஞ்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும்.

இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலாவ சப்பாத்திக்கு மட்டுமில்லாம பூரி இட்லி தோசை சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடலாம் அட்டகாசமான ஒரு சைட் டிஷ்ஷா இருக்கும். இந்த வெயில் காலத்துக்கு வீட்ல தயிர் சாதம் செஞ்சா அதுக்கும் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலாவை சைட் டிஷ்ஷா வைத்து சாப்பிடலாம். சாப்பிடுற சாப்பாட்டு ஊட்டி விடும் அப்படின்னு சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு அட்டகாசமான சைடிஷ் தான் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா.

Advertisement

சின்ன குழந்தைகளுக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விட்டீங்கன்னா கண்டிப்பா காலி பண்ணிட்டு தான் வருவாங்க. வீட்டுக்கு விருந்தாளி வந்தா கூட அவங்களுக்கும் நீங்க ஏதாவது செஞ்சு கொடுக்கலாம். உங்கள கண்டிப்பா பாராட்டுவாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கக்கூடிய ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்

உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா | Potato Peas Masala

Print Recipe
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலாவ சப்பாத்திக்கு மட்டுமில்லாம பூரி இட்லி தோசை சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடலாம் அட்டகாசமான ஒரு சைட் டிஷ்ஷா இருக்கும். இந்த வெயில் காலத்துக்கு வீட்ல தயிர் சாதம் செஞ்சா அதுக்கும் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலாவை சைட்
Advertisement
டிஷ்ஷா வைத்து சாப்பிடலாம். சாப்பிடுற சாப்பாட்டு ஊட்டி விடும் அப்படின்னு சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு அட்டகாசமான சைடிஷ் தான் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கக்கூடிய ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Potato Peas Masala
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Servings 4
Calories 240

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 உருளைக்கிழங்கு
  • 1 கைப்பிடி அளவு பச்சை பட்டாணி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 பட்டை
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 கிராம்பு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 டீஸ்பூன் வெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் உருளைக்கிழங்கை ஒரு குக்கரில் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் சோம்பு பட்டை கிராம்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு அதில் பூண்டு மற்றும் இஞ்சியை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும், மிளகாய் தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கலந்து கொள்ளவும்
  • பிறகு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை மிளகாயும் சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கவும்
  • சீரகத்தூள் மல்லித்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் உருளைக்கிழங்கை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்
  • பச்சை பட்டாணியையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரம் மசாலா சேர்த்து நன்றாக பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
  • இறுதியாக வெண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா தயார்

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Cholesterol: 12mg | Potassium: 104mg | Calcium: 13mg

இதையும் படியுங்கள் : சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா போண்டா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Advertisement
Ramya

Recent Posts

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

4 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

13 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

21 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

2 நாட்கள் ago