Advertisement
சைவம்

அட்டகாசமான நெல்லை ஸ்பெஷல் உருளைப் பொரியல் ரெசிபி உங்களுக்காக இதோ!

Advertisement

காரசாரமான உருளைப் பொரியல்ன்னா அது இப்படித்தான் இருக்கும். இதை பிடிக்காதுன்னு யாரும் சொல்லவே மாட்டாங்க. உருளைக்கிழங்கை பிடிக்காத குழந்தைளே இருக்க முடியாது. உருளைக்கிழங்கை எப்படி செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

 உருளைக்கிழங்கு பொரியல் என்று சொன்னாலே இதை விரும்பி எல்லோரும் சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்றே சொல்லலாம். . அதிலும் நெல்லை ஸ்டைலில் உருளைக்கிழங்கு பொரியல் செய்து கொடுத்தால் சொல்லவே வேண்டாம்.

Advertisement

நெல்லை உருளைப் பொரியல் குறிப்பாக ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கு இதை சொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும். தேவைப்பட்டால் சப்பாத்திக்கு கூட இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம். எல்லா வெரைட்டி ரைஸ்க்கும் சைடிஷ் ஆக வைக்கலாம். ஒரு ஸ்பெஷல் மசாலா சேர்த்து போட்டு, இந்த உருளைக்கிழங்கு பொரியல் இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம்.  சுவைத்து விட்டால் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் இந்த ரெசிபி உங்க வீட்டில் இருக்கும்.

உருளைப் பொரியல் | Potato Poriyal Recipe In Tamil

Print Recipe
நெல்லை உருளைப்பொரியல் குறிப்பாக
Advertisement
ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கு இதை சொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.தேவைப்பட்டால் சப்பாத்திக்கு கூட இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம். எல்லா வெரைட்டி ரைஸ்க்கும்சைடிஷ் ஆக வைக்கலாம். ஒரு ஸ்பெஷல் மசாலா சேர்த்து போட்டு, இந்த உருளைக்கிழங்கு பொரியல்இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம். சுவைத்து விட்டால் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் இந்த ரெசிபி உங்க வீட்டில் இருக்கும்.
Advertisement
Course Fry, LUNCH
Cuisine tamil nadu
Keyword Potato Poriyal
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 230

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 பெரிய வெங்காயம்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • உப்பு தேவைக்கு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கடுகு
  • உளுந்து

அரைக்க

  • 2 தேங்காய்த் துருவல்
  • 1 சீரகம்
  • 5 சின்ன வெங்காயம்

Instructions

  • உருளைக்கிழங்கை தோல் நீக்கி விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்குங்கள்.
  • அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்து வையுங்கள்.
  • எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.
  • வதங்கியதும் கிழங்கு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவையுங்கள்.
  • கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, கிழங்கு வெந்து சுருளும் வரை கிளறி, கறிவேப்பிலைத் தூவி இறக்குங்கள்.
  • சுவையான நெல்லை உருளைப் பொரியல் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 230kcal | Carbohydrates: 8g | Protein: 46g | Fat: 12g | Saturated Fat: 4.3g | Cholesterol: 67mg | Sodium: 37mg | Potassium: 150mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

2 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

3 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

5 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

6 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

9 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

10 மணி நேரங்கள் ago