கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் குடிக்க வேண்டிய பழச்சாறுகள்!

- Advertisement -

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தங்காள் வாழ்வில் முழுமை அடைவதாக உணரும் தருணம் எது என்றால் அது ஒரு குழந்தையை பெற்றெடுப்பது தான். அது மட்டும் இல்லாமல் தனது வாழ்வில் தன் குழந்தையை பெற்றெடுக்கும் அந்த பத்து மாதங்களை தான் முக்கிய பகுதியாக கருதுவார்கள். அந்த நேரத்தில் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் சில சிரமங்களையும் பொறுப்பெடுத்தாமல் தங்கள் கர்ப்பத்தில் இருக்கும் தங்கள் குழந்தையை பெரிதாக எண்ணுவார்கள். மேலும் அந்த கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு உடலில் சில ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும். ஆனால் இதையெல்லாம் சில உணவு பழக்க வழக்கங்களால் நம்மால் சரி செய்ய முடியும். ஆகையால் நாம் இன்று கர்ப்ப காலங்களில் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதற்கு உகுந்த பழச்சாறுகள் எது என்று இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க. Youtube Sub

- Advertisement -

எலுமிச்சை பழச்சாறு

கர்ப்பிணி காலங்களில் பெண்கள் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் எலுமிச்சை பழச்சாறு சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள விட்டமின் சி நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். மேலும் விட்டமின் சி குறைபாட்டையும் முற்றிலும் நீக்கிவிடும். ஆகையால் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் எலுமிச்சை பழச்சாறு குடிப்பதும் சிறந்தது.

மாதுளை பழச்சாறு

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மாதுளை ஜூஸ் அவசியமான எடுத்து கொள்ள வேண்டும். மாதுளை ஜூஸ் குடிப்பதால் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஏனென்றால் மாதுளையில் விட்டமின் சி, விட்டமின் ஏ மற்றும் இரும்பு சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது மேலும் முக்கியமாக மாதுளை ஜூஸ் குடிப்பதால் குழந்தையின் மூளையும் வலுவடையும். கர்ப்ப காலத்தில் உடலை ஈரப்பதமாக வைப்பதற்கு மாதுளை ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும்.

திராட்சை பழச்சாறு

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலங்களில் திராட்சை பழச்சாறு குடித்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் மேலும் திராட்சை பழத்தில் உள்ள சத்துக்கள் குழந்தை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கும் ஆகையால் கர்ப்ப காலங்களில் திராட்சை பால சாறு குடிப்பதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படுகின்றனர்.

-விளம்பரம்-

பீட்ரூட் சாறு

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் பொழுது வயிற்றில் குழந்தை இருப்பதனால் கர்ப்பிணி பெண்களுக்கு உடலில் உள்ள ரத்தத்தின் அளவு குறைந்து கொண்டே போகும். ஆகையால் கர்ப்ப காலத்தில் பீட்ரூட் ஜூஸை குடிப்பதன் மூலம் உடலில் ரத்தம் குறையும் பிரச்சனை சரியாக பெரிதும் உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here