Advertisement
சைவம்

பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

இன்னிக்கு சூப்பரான வட இந்திய உணவான ஆலு மேத்தி எப்படி செய்யறது அப்படின்னு பார்க்க இருக்கோம் . அது என்னடா பேரு ஆளலு மேத்தி அப்படின்னு பாத்தீங்களா அது ஒன்னும் இல்லங்க உருளைக்கிழங்கும் வெந்தயக் கீரையும் அதுதான் பேரு. இப்போ உருளைக்கிழங்கு வெந்தயக்கீரையும் வைத்து சுவையான ஒரு சைடு டிஷ் பண்ண போறோம். அந்த சைடிஸ் எல்லா கலந்த சாதத்துக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். எப்ப பாத்தாலும் கீரை வாங்கினா கடையல், பொரியல், குழம்பு வச்சு போரடிக்குதா? நமக்கு இந்த மாதிரி செஞ்சு சாப்பிட ரொம்பவே வித்தியாசமாவும் இருக்கும் புதுசாவும் இருக்கும். நம்ம எல்லாம் உருளைக்கிழங்கு தனியாவும் கீரையை தனியாவும் சமைத்து சாப்பிடுவோம்.

நம்ம உருளைக்கிழங்கையும் கீரையும் சேர்த்து செஞ்சோம்னா எப்படி இருக்கும். அந்த மாதிரி சுவையான ஆலுவும் மேத்தியும் எப்படி செய்வது என்று தெரிந்து இருக்கோம். இந்த பதிவுல எப்படி சூப்பரான ஆலு மேத்தி செய்யலாம். வட இந்தியாவில் ரொம்பவே பேமஸான ஒரு உணவு இந்த ஆலு மேத்தி.  உணவு எல்லாத்துக்குமே இந்த மேத்திய சேர்த்து  பண்ணுவாங்க. அதாவது வெந்தயக்கீரை அவங்க அதிக அளவுல யூஸ் பண்ணுவாங்க.

Advertisement

இந்த வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தருவது மட்டும் இல்லாம அதிக அளவு இரும்பு சத்து இருக்கிறதுனால இது உடலுக்கு  நிறைய சத்துக்களை கொடுக்கக் கூடியது. அது கூட இந்த உருளைக்கிழங்கை வைத்து செய்யும் போது அது இன்னும் சூப்பரா இருக்கும். அதுவும் நம்ம இப்ப பண்ண போற உருளைக்கிழங்கு என்னன்னு பார்த்தீங்கன்னா பேபி உருளைக்கிழங்கு. அதாவது குட்டி குட்டி உருளைக்கிழங்குல பண்ண போறோம். இந்த சுவையான பஞ்சாபி ஆலு மேத்திய எப்படி  ஈசியா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

பஞ்சாபி ஆலு மேத்தி | Punjabi aloo methi recipe in tamil

Print Recipe
நம்ம எல்லாம் உருளைக்கிழங்கு தனியாவும் கீரையை தனியாவும் சமைத்து சாப்பிடுவோம். நம்ம உருளைக்கிழங்கையும் கீரையும் சேர்த்து செஞ்சோம்னா எப்படி இருக்கும். அந்த மாதிரி சுவையான ஆலுவும் மேத்தியும் எப்படி செய்வது என்று தெரிந்து இருக்கோம். இந்த பதிவுல எப்படி சூப்பரான ஆலு மேத்தி செய்யலாம். வட இந்தியாவில் ரொம்பவே பேமஸான ஒரு
Advertisement
உணவு இந்த ஆலு மேத்தி.  உணவு எல்லாத்துக்குமே இந்த மேத்திய சேர்த்து  பண்ணுவாங்க. அதாவது வெந்தயக்கீரை அவங்க அதிக அளவுல யூஸ் பண்ணுவாங்க. இந்த வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தருவது மட்டும் இல்லாம அதிக அளவு இரும்பு சத்து இருக்கிறதுனால இது உடலுக்கு  நிறைய சத்துக்களை கொடுக்கக் கூடியது. அது கூட இந்த உருளைக்கிழங்கை வைத்து செய்யும் போது அது இன்னும் சூப்பரா இருக்கும்.
Course Side Dish
Cuisine north india, punjabi
Keyword aloo egg gravy, Aloo Gobi Masala, aloo Gravy, Aloo Paneer Sabji
Advertisement
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 6 People
Calories 150
Cost 75

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1/4 கிலோ பேபி உருளைக்கிழங்கு
  • 1 கட்டு வெந்தயக்கீரை
  • 1  வெங்காயம்
  • 5 பல் பூண்டு                          
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் தனியா தூள்
  • 1/4 ஸ்பூன் கரம் மசாலா 
  • 1 ஸ்பூன் சீரகதூள்
  • 1/4 ஸ்பூன் சாட் மசாலா தூள்
  • 1 ஸ்பூன் சீரகம் 
  • 14 ஸ்பூன் வெந்தயம்   
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு                     

Instructions

  • முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெந்தயக் கீரையை இலைகளை தனியாக பிரித்து எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்பு இது மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு இது சீரகத்தூள், சாட் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு இதில் சுத்தம் செய்து  வைத்துள்ள வெந்தயக் கீரையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும் .
  • பிறகு அதில் வேக வைத்து எடுத்து வைத்துள்ள  பேபி உருளைகிழங்கை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சூடாக பரிமாறினால் சுவையான ஆலு மேத்தி தயார். இது எல்லாவிதமான கலந்த சாதத்திற்கும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Nutrition

Calories: 150kcal | Carbohydrates: 35g | Protein: 19g | Fat: 17g


Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

2 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

7 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

16 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

17 மணி நேரங்கள் ago