Advertisement
சைவம்

பூ போன்ற பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி ?

Advertisement

கொழுக்கட்டை என்றவுடன் நமக்கு முதலில் ஞாபகம் வருவது ஆதி மூலம் என்று அழைக்கப்படும் விநாயகர் தான். விநாயகருக்கு பிடித்த பிரசித்தி பெற்ற உணவுகளில் கொழுக்கட்டையும் ஒன்று என்று சொல்வார்கள். அதனால் தான் கொழுக்கட்டையை இன்று வரை விநாயகருக்கு படைத்து வருகிறோம். அது மட்டும் இல்லாமல் நாம் பாரம்பரிய உணவில் எப்பொழுதும் கொழுக்கட்டை இடம்பெற்று வருகிறது.

மேலும் கொழுக்கட்டையில் நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் உடலில் அதிகப்படியான சத்துக்கள் சேர்க்கும் என்றும் சொல்வார்கள். இப்படி விநாயகருக்கு பிடித்த உணவும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவான கொழுக்கட்டைகள் இந்தியா முழுவதும் 21 வகைகளில் செய்யபட்டு வருகின்றனர். அதில் பூரண கொழுக்கட்டை ஒன்றாகும். இன்று நாவிற்கு ருசியான பூரண கொழுக்கட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Advertisement

கொழுக்கட்டை | Kolukattai Seivathu Eppadi

Print Recipe
கொழுக்கட்டையில் நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் உடலில் அதிகப்படியான சத்துக்கள் சேர்க்கும் என்றும் சொல்வார்கள். இப்படி விநாயகருக்கு பிடித்த உணவும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவான கொழுக்கட்டைகள் இந்தியா முழுவதும் 21 வகைகளில் செய்யபட்டு வருகின்றனர். அதில் பூரண கொழுக்கட்டை ஒன்றாகும். இன்று நாவிற்கு ருசியான பூரண கொழுக்கட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword purana kolukattai, பூரண கொழுக்கட்டை
Prep Time 30 minutes
Cook Time 30 minutes
Total Time 1 hour
Servings 5 People
Calories 190.13

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 கடாய்
  • 2 பவுள்

Ingredients

  • 1 கப் அரிசி மாவு
  • ½ கப் வெல்லம் பொடியாக உடைத்து கொள்ளவும்
  • ¼ கப் தேங்காய் துருவல்
  • 3 tbsp நெய்
  • 1 சிட்டிகை உப்பு
  • 2 கப் தண்ணீர்

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளவும், அடுத்து 1 1/2 டீஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளுங்கள், அதன் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் தண்ணீர் நன்றாக கொதிக்கவிடவும்.
  • தண்ணீர் கொதித்தவுடன் அரிசி
    Advertisement
    மாவை சிறுது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். அதன் பின்பு தண்ணீரின் அளவு அதிகமாக வற்றி விடாமல் மாவு கொல கொலவென்று தண்ணீர் பதத்துடன் இருக்கும் பொழுது கடாய் இறக்கி விடுங்கள் இல்லை என்றால் மாவு டைட்டா இறுகி விடும்.
  • பின் சூடு ஆறும் வரை காத்திருந்து சூடு ஆறிய பின் கைகளாலே நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதன்பின்பு கொழுக்கட்டை உள் ஸ்டப்பிங் செய்ய பூரணம் செய்ய வேண்டும்.
  • பின்பு கடாயை அடுப்பில் வைத்து வெல்லத்தை
    Advertisement
    நன்றாக தூள் தூளாக உடைத்து கடாயில் போடுங்கள் பின்பு அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள் பின்பு வெல்லம் நன்றாக உருகி வந்ததும் கடாயில் உள்ள வெள்ளத்தை நன்றாக வடிகட்டி விட்டு மீண்டும் கடாயில் சேர்த்து கிண்டுங்கள்.
  • பின்பு நாம் வைத்திருக்கும் தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறி விடுங்கள். பின் பூரணம் பதத்திற்கு வந்தவுடன் நாம் வைத்திருக்கும் மீதம் உள்ள நெய்யை உற்றி நன்றாக கிளறி விடுங்கள். பின்பு தண்ணீர் வற்ற விட்டு பதத்திற்கு வந்தவுடன் கடாயை இறக்கி விடுங்கள்.
  • அடுத்து நாம் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து உருண்டை பிடித்து எடுத்து கொள்ளுங்கள். அதன் பின்பு வாழை இலை அல்லது வேறு ஏதும் மட்டமான பாத்திரம் இருந்தால் அதில் எண்ணெய் தடவி அந்த உருண்டை அதில் வைத்து அழுத்தி கொள்ளுங்கள்.
  • தட்டையாக வந்தவுடன் நாம் தயாரித்து வைத்திருக்கும் பூரணத்தை உள் வைத்து உருண்டையாக பிடித்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் கொழுக்கட்டை மாவையும் இவ்வாறு தயார் செய்து கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு இட்லி பாத்திரத்தில் அடியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விட்டு தண்ணீர் கொதித்த பின் இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து 15 நிமிடங்கள் அவிக்கவும்.
  • 15 நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்தால் பூரண கொழுக்கட்டை தயாராகி இருக்கும். அவ்வளவுதான் பூரண கொழுக்கட்டை இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 5person | Calories: 190.13kcal | Carbohydrates: 35.8g | Protein: 3.9g | Fat: 21.13g | Cholesterol: 1.88mg | Sodium: 27.22mg | Potassium: 211.23mg | Sugar: 29.53g | Vitamin A: 0.3IU | Vitamin C: 4.1mg | Calcium: 44.4mg | Iron: 1.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

4 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

6 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

8 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

13 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

15 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

16 மணி நேரங்கள் ago