Advertisement
அசைவம்

காடை ரோஸ்ட் இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்க. நீங்க செஞ்சு வச்ச உடனே காலி ஆயிடும்.

Advertisement

காடை வெரைட்டிஸ் எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சது  சைடிஷ் தான். காடை சைடிஷ்க்கு  அப்படின்னு சொல்லி தனியா ஒரு பேன் பேஸ் இருக்கு. அப்படி எந்த ஒரு சாப்பாடோடையும் காடை சைடிஷா வச்சு சாப்பிடுற பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும்.அப்படி இந்த காடை ரோஸ்ட்  எல்லாருக்கும் பிடிக்கும். நிறைய காடை சைடிஸ்கள் இருந்தாலும் 65 , வறுவல், தந்தூரிகள் எப்படி பல வகைகளில் காடை இருந்தாலும் மசாலாக்கள் இருந்தாலும் இந்த காடை ரோஸ்ட்  ஒரு டைம் நீங்க ட்ரை பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

 சுவையான இந்த காடை ரோஸ்ட் நீங்க செய்து கொடுக்கும்போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்த காடை மேல நல்ல வெண்ணெய் தடவி ரோஸ்ட் பண்ணும்போது எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல இருக்கிற குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே காடை ரொம்பவே பிடிச்சமான ஒரு உணவா மாறிடும்.

Advertisement

அதுலயும் நீங்க இந்த மாதிரி நல்ல மொறுமொறுப்பா ஒரு ரோஸ்ட் பண்ணி கொடுக்கும் போது ரொம்பவே சுவையா இருக்கும் நல்லா ருசிச்சு சாப்பிடுவாங்க. அடிக்கடி காடை ரோஸ்ட் பண்ணி கொடுக்க சொல்லியும் உங்களை கேட்டுட்டு இருப்பாங்க.  சுவையான இந்த காடை ரோஸ்ட்  எப்படி சமைக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

காடை ரோஸ்ட் | Quail Roast Recipe In Tamil

Print Recipe
 சுவையான இந்த காடை ரோஸ்ட் நீங்க செய்து கொடுக்கும்போதுஉங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்த காடை மேல நல்ல வெண்ணெய் தடவி ரோஸ்ட் பண்ணும்போது எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல இருக்கிறகுழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே காடை ரொம்பவே பிடிச்சமான ஒரு உணவா
Advertisement
மாறிடும். சுவையான இந்த காடை ரோஸ்ட்  எப்படி சமைக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Course LUNCH, starters
Cuisine tamil nadu
Keyword Quail Roast
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 489

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ காடை
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 துண்டு இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 4 பச்சைமிளகாய்
  • 1 கைப்பிடி புதினா
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1/2 எலுமிச்சை பழம்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 2 ஸ்பூன் தயிர்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் காடையை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் வெங்காயத்தை பொடியாக நீளவாக்கில் நறுக்கிகொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை நன்றாக மொறுமொறுவென்று பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் இஞ்சி, கொத்தமல்லி, புதினா,  கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  •  பின் சோம்பு, மிளகு  பொரித்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  •  
    அதில் எலுமிச்சை பழசாறு மசாலாவிற்கு தேவையான அளவுஉப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள மசாலாவில் மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக் கொள்ள வேண்டும்.
  • பிறகு சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள காடையை ஒருபாத்திரத்தில் வைத்து அதில் தயிர் காடைக்கு தேவையான அளவு உப்பு  அரைத்த மசாலாவைசேர்த்து நன்றாக கலந்து விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  •  பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் அல்லதுஎண்ணெய் சேர்த்து அதில் கலந்து வைத்துள்ள காடையை மிதமான தீயில் வைத்து ரோஸ்ட் செய்ய ஆரம்பிக்கவும்.
  • ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் நன்றாக திருப்பி போட்டு காடை வெந்த பிறகு எடுத்து சூடாக பரிமாறினால்சுவையான காடை ரோஸ்ட் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 489kcal | Carbohydrates: 34g | Sodium: 252mg | Potassium: 356mg | Fiber: 4g | Calcium: 36mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

3 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

3 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

4 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

4 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

6 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

7 மணி நேரங்கள் ago