சுவையான ரவா உருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை உணவு!

- Advertisement -

நாம் பொதுவாக காலை உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி இது போன்ற டிபன் உணவாக செய்வோம் இல்லை என்றால் ஏதாவது சாதம் ரெசிபி செய்து சாப்பிடுவோம். இப்படி ஒரே மாதிரியான உணவுகளையே அடிக்கடி செய்வதற்கு பதில் நீங்கள் இதுபோன்று புதுமையான முறையில் ரவா உருண்டையை காலை உணவாக செய்து சாப்பிடலாம் அற்புதமான சுவையில் இருக்கும்

இதையும் படியுங்கள் : அவல் இருந்தால் போதும் காலை உணவு செய்யலாம் ?

- Advertisement -

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் அடுத்த முறையும் இதை செய்ய சொல்லி உங்களை தொல்லை பண்ணுவார்கள் அந்த அளவிற்கு சுவையாக இருக்கும். அதனால் இன்று காலை உணவிற்கு ஏற்ற ரவா உருண்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-
Print
No ratings yet

ரவா உருண்டை | Rava Balls Recipe in Tamil

நாம் பொதுவாக காலை உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி இது போன்ற டிபன் உணவாக செய்வோம் இல்லை என்றால் ஏதாவது சாதம் ரெசிபி செய்து சாப்பிடுவோம். இப்படி ஒரே மாதிரியான உணவுகளையே அடிக்கடி செய்வதற்கு பதில் நீங்கள் இதுபோன்று புதுமையான முறையில் ரவா உருண்டையை காலை உணவாக செய்து சாப்பிடலாம் அற்புதமான சுவையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் அடுத்த முறையும் இதை செய்ய சொல்லி உங்களை தொல்லை பண்ணுவார்கள் அந்த அளவிற்கு சுவையாக இருக்கும்.
Prep Time20 minutes
Active Time10 minutes
Total Time30 minutes
Course: Breakfast
Cuisine: Indian, TAMIL
Keyword: rava, ரவை
Yield: 4 People
Calories: 75kcal

Equipment

 • 1 பெரிய பவுள்
 • 1 இட்லி பாத்திரம்
 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 1 கப் அவல்
 • 1 கப் வறுக்காத ரவா
 • தண்ணீர் தேவையான அளவு
 • 1 tsp இஞ்சி பொடியாக நறுக்கியது
 • 1 tsp சீரகம்
 • உப்பு தேவையான அளவு
 • 2 tsp எண்ணெய்
 • 1/2 tsp கடுகு
 • 1/2 tsp உளுந்தம் பருப்பு
 • 1/2 tsp கடலைப்பருப்பு
 • 2 வர மிளகாய்
 • கருவேப்பிள்ளை தேவையான அளவு
 • இட்லி பொடி தேவையான அளவு
 • 1 tsp நெய் ( அ ) எண்ணெய்

செய்முறை

 • முதலில் அவல் எடுத்து நன்கு அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும். அதில் வறுக்காத ரவை சேர்த்து, ரவை மூழ்கும் அளவுக்கு சுடுதண்ணீர் ஊற்றி கலந்து ஒரு பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
 • பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கையில் தண்ணீர் தொட்டுக்கொண்டு கலந்து எடுத்த ரவா, அவல் மாவை, சின்ன சின்ன உருண்டையாக எடுக்கவும்.
 • இட்லி தட்டில், உருட்டி எடுத்த ரவா, அவல் உருண்டையை வைத்து ஒரு ஏழு நிமிடம் வேக வைக்கவும். வேகவைத்து எடுத்த பின் கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.
 • அதில், நாம் வேகவைத்து எடுத்த ரவா, அவல் உருண்டைகளை சேர்த்து, அதன் மேல் இட்லி பொடியை, சாரல் போல தூவி விட்டு, நீங்கள் விரும்பினால் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால், அவல் ரவா உருண்டை தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 75kcal | Carbohydrates: 38g | Fat: 29g

LEAVE A REPLY

Recipe Rating
Please enter your comment!
Please enter your name here