Advertisement
Uncategorized

ருசியான சிவப்பு அவல் கிச்சடி ,அதுவும் சுலபமா செய்வது எப்படி என்று பாப்போம் வாருங்க!

Advertisement

அவல் ஒரு பாரம்பரிய உணவு.  தொன்று தொட்டு நம் முன்னோர்களால் சாப்பிடப்பட்டு வந்துள்ளது . இருப்பினும் அவல் ரெசிபி அதிகமாக இல்லை. பெரும்பாலும் அனைவரும், அவலை ஊறவைத்து தேங்காய் , வெள்ளம் சேர்த்து செய்கிறோம். ஆனால் இனிப்பு உணவை அடிக்கடி சாப்பிடவும் பலர் விரும்புவதில்லை. . இனிப்பு அவல் வயிற் நிரம்பும் அளவிற்கு  அதிகமாகவும் சாப்பிட இயலாது.

ஆகையால் அவலில் போஹா, செய்து வட இந்தியர்கள் சாப்பிடுவார்கள். போஹாவை விட அதீத சுவைகொண்ட இந்த சிவப்பு அவல் கிச்சடி செய்து ஒருமுறை சாப்பிட்டு பாருங்க.அடிக்கடி செய்து வீட்டில் உள்ள அனைவருக்கும் குடுத்து நீங்களும் விரும்பி சாப்பிடுவீர்கள். அவல் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் இதில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. இதன் நிறம் அரிசியின் நிறத்தை சார்ந்தது. சிவப்பு அவல் உடல் எடையை குறைக்க உதவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உடலை உறுதியாக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாங்க சிவப்பு அவல் கிச்சடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisement

சிவப்பு அவல் கிச்சடி | Red Flattened Rice Kichadi In Tamil

Print Recipe
அவல்ஒரு பாரம்பரிய உணவு.  தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் சாப்பிடப்பட்டு வந்துள்ளது . இருப்பினும் அவல் ரெசிபி அதிகமாக இல்லை. பெரும்பாலும் அனைவரும், அவலை ஊறவைத்து தேங்காய் , வெள்ளம் சேர்த்து செய்கிறோம். ஆனால் இனிப்பு உணவை அடிக்கடி சாப்பிடவும் பலர் விரும்புவதில்லை. .
Advertisement
இனிப்பு அவல் வயிற் நிரம்பும் அளவிற்கு  அதிகமாகவும்சாப்பிட இயலாது. ஆகையால் அவலில் போஹா, செய்து வட இந்தியர்கள் சாப்பிடுவார்கள். போஹாவை விட அதீத சுவைகொண்ட இந்த சிவப்பு அவல் கிச்சடி செய்து ஒருமுறை சாப்பிட்டு பாருங்க.அடிக்கடி செய்து வீட்டில் உள்ள அனைவருக்கும் குடுத்து நீங்களும் விரும்பி சாப்பிடுவீர்கள்.
Course Breakfast
Cuisine tamilnadu
Keyword Flattened Red Rice Kitchadi
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 84

Equipment

  • 1 கடாய்
  • மிக்ஸி

Ingredients

  • 2 கப் சிவப்பு அவல்
  • 2 கைப்பிடி பாசிப்பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 10 கறிவேப்பிலை
  • 1 மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல்
  • 1 கேரட்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 3 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லித்தழை தேவையான அளவு

Instructions

  • வெங்காயத்தை நீளமாகவும், கேரட்டை பொடியாகவும் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.
  • பாசிப்பருப்பைக் கழுவி மலர வேக வைக்கவும். (குழைந்துவிடக் கூடாது). அவலை நன்கு களைந்து கல் அரித்து தண்ணீரை லேசாகப் பிழிந்து வைக்கவும்.
  • அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்
  • சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கேரட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன்அவல், வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் உப்புச் சேர்த்து கிளறவும்.பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறிவிட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான, சத்தான சிவப்பு அவல் கிச்சடி ரெடி

Notes

*வேண்டுமெனில் வேக வைத்த பீன் பட்டாணியும் சேர்த்து செய்யலாம்.

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Carbohydrates: 45g | Protein: 12g | Sodium: 4mg | Potassium: 94mg | Fiber: 2g
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

2 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

2 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

3 மணி நேரங்கள் ago

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

4 மணி நேரங்கள் ago

இந்த கோடை வெயிலுக்கு இதமாக உங்கள் குழந்தைகளுக்கு குளு குளு நுங்கு கீர் செய்து கொடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

5 மணி நேரங்கள் ago

திருமண விழாக்களில் முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள்

ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…

7 மணி நேரங்கள் ago