Advertisement
ஸ்நாக்ஸ்

மொறுமொறுன்னு ஜவ்வரிசி போண்டா  சில நிமிஷத்தில் வீட்டிலேயே சூப்பராக செய்து விடலாம்! அசத்தலான ஸ்னாக்ஸ் ரெசிபி இதோ!

Advertisement

பொதுவாக பஜ்ஜி போண்டா என்றால் அதை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு போண்டா பஜ்ஜி என்றால் மிகவும் பிடிக்கும். மழை நேரங்களாக இருந்தாலும் சரி வெயில் நேரங்களாக இருந்தாலும் சரி அனைத்து காலங்களிலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு தான் இந்த போண்டா. டீக்கடைகளில் கிடைக்கக்கூடிய இந்த போண்டாக்களை நாம் வீட்டிலேயே சுவையான முறையில் செய்ய முடியும்.

உளுந்து போண்டா, பருப்பு போண்டா, வெங்காய போண்டா, மசால் போண்டா, முட்டை போண்டா, சிக்கன் போண்டா, மட்டன் போண்டா, மசால் போண்டா, உருளைக்கிழங்கு போண்டா என விதவிதமான போண்டாக்கள் உள்ளன. இதையெல்லாம் கடைகளில் மட்டும் இல்லாமல் வீட்டிலே செய்தாலும் சுவை அருமையாக இருக்கும். மாலை நேரத்தில் டீ காபியுடன் இந்த போண்டாவை சாப்பிட்டால் சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமையாக இருக்கும்.

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போண்டாக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இத்தனை போண்டாக்கள் இருந்தாலும் இன்று நாம் செய்ய போகும்போது ஜவ்வரிசி போண்டா. ஜவ்வரிசியில் போண்டாவா என ஆச்சரியப்பட வேண்டாம். வித்தியாசமாக செய்யப் போகும் இந்த ஜவ்வரிசி போண்டாவும் மற்ற போண்டாக்களை போல் ருசியாகவே இருக்கும். இந்த ருசியான அருமையான ஜவ்வரிசி போண்டா எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

ஜவ்வரிசி போண்டா | Sabudhana Bonda Recipe In Tamil

Print Recipe
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போண்டாக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இத்தனை போண்டாக்கள் இருந்தாலும் இன்று நாம்
Advertisement
செய்ய போகும் போது ஜவ்வரிசி போண்டா. ஜவ்வரிசியில் போண்டாவா என ஆச்சரியப்பட வேண்டாம். வித்தியாசமாக செய்யப் போகும் இந்த ஜவ்வரிசி போண்டாவும் மற்ற போண்டாக்களை போல் ருசியாகவே இருக்கும். இந்த ருசியான அருமையான ஜவ்வரிசி போண்டா எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Sabudhana Bonda
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 350

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் ஜவ்வரிசி
  • 3 உருளைக்கிழங்கு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4 பச்சை மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் சீரக பொடி
  • 1 கப் கடலை மாவு
  • 1/2 கப் அரிசி மாவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ஜவ்வரிசி உருளைக்கிழங்கு அரிசி மாவு கடலை மாவு அனைத்தையும் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
  •  
    பிறகு நறுக்கிய வெங்காயம்,நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது சூடான சுவையான ஜவ்வரிசி போண்டா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 350kcal | Carbohydrates: 58.5g | Fat: 0.02g | Potassium: 5mg | Fiber: 3g | Calcium: 20mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

4 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

14 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

20 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

23 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

24 மணி நேரங்கள் ago