Advertisement
ஸ்வீட்ஸ்

வீட்டில் சத்துமாவு இருந்தால் பஞ்சு போல கேக் இப்படி செய்து அசத்துங்கள் கொஞ்சம் கூட மிச்சமாகாது!

Advertisement

90களில் பள்ளி காலங்களில் அதிகமா உண்ணப்பட்ட ஒரு சத்தான உணவு அப்படின்னு பார்த்தோம்னா அங்கன்வாடிகளில் வாங்கின சத்து மாவு தான். இந்த சத்து மாவுல கொழுக்கட்டை, கஞ்சி, புட்டு இப்படின்னு விதவிதமா செஞ்சு ஈவ்னிங் டைம்ல நமக்கு சிற்றுண்டியா கொடுத்து பழகி இருக்காங்க. அந்த சத்துமாவு கஞ்சி எவ்வளவு டேஸ்டா இருக்கும் அப்படின்னு சொல்றதுக்கே வார்த்தை இருக்காது. அதுல அவ்வளவு சத்துக்கள் இருக்கும்.

இப்ப கிடைக்கிறதை விட அந்த 90களில் கிடைத்த சத்துமாவுகளில் ரொம்ப அதிகமான  சுவை இருக்கும். இப்போ அந்த சத்துமாவு வச்சி ரொம்ப டேஸ்ட்டா பஞ்சு போல சாஃப்டா கேக் செய்து சாப்பிட போறோம். என்னடா நம்ம சத்துமா வச்சு கஞ்சி இல்ல கொழுக்கட்டை தானே சாப்பிட்டு இருக்கோம் இது என்ன புதுசா கேக் சாப்பிட போறோம் அந்த கேக் எப்படி இருக்கும் என்னன்னு தெரியலையே அப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு இந்த சத்துமா வச்சு சத்தான சுவையான பஞ்சு மாதிரியான கேக்க செய்து அசத்தப்போறோம்.

Advertisement

டேஸ்டா சாப்பிடவும் ரொம்ப ஈஸியா வீட்ல இருக்குற ஐட்டங்கள் வச்சே  நம்ம இந்த சத்துமாவு கேக் செய்து சாப்பிட போறோம் .இந்த சத்து மாவு கேக்கு எப்படி செய்வது தெரிஞ்சுக்க போறோம். ஊட்டச்சத்து நிறைந்த இந்த சத்து மாவுக்கு 90களில் ரொம்ப பெரிய பங்கு இருந்துச்சு. இப்ப கிடைக்கிற மாதிரி நிறைய சத்தான பொருட்கள் எல்லாம் அந்த டைம்ல வாங்கற அளவுக்கு ரொம்ப வசதி உள்ள ஆட்கள் கம்மியான ஆட்கள் தான் இருந்தோம். அதனால் அப்படி இருக்கும்போது எல்லாருக்குமே இந்த அங்கன்வாடியில் கிடைக்கிற சத்துமாவு ரொம்பவே ஒரு உதவியான விஷயமா இருந்துச்சு . அப்படிப்பட்ட சத்துமாவு இப்பவும் கிடைச்சிட்டு இருக்கு. அந்த சத்து மாவு இல்லன்னா வேற  கடையில கிடைக்கும் சத்துமாவுல கூட நீங்கள் செய்யலாம்.  அதுலயும் இந்த கேக் செய்யலாம். வாங்க சத்து மாவுல சுவையான ருசியான சத்தான பஞ்சு மாதிரியான கேக் எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

சத்துமாவு கேக் | Sathu Mavu Cake Recipe In Tamil

Print Recipe
90 களில் பள்ளி காலங்களில் அதிகமா உண்ணப்பட்ட ஒரு சத்தான உணவு அப்படின்னு பார்த்தோம்னா அங்கன்வாடிகளில் வாங்கின சத்து மாவு
Advertisement
தான். இந்த சத்து மாவுல கொழுக்கட்டை, கஞ்சி, புட்டு இப்படின்னு விதவிதமா செஞ்சு ஈவ்னிங் டைம்ல நமக்கு சிற்றுண்டியா கொடுத்து பழகி இருக்காங்க. அந்த சத்துமாவு கஞ்சி எவ்வளவு டேஸ்டா இருக்கும் அப்படின்னு சொல்றதுக்கே வார்த்தை இருக்காது. அதுல அவ்வளவு சத்துக்கள் இருக்கும்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Sathu mavu Cake
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 339

Equipment

  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 1/2 கப் சத்து மாவு
  • 1/4 கப் சர்க்கரை
  • 1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • 1/4 கப் சமையல் எண்ணெய்
  • 1 முட்டை
  • 12 கப் பால்
  • 12 ஸ்பூன் பேக்கிங் சோடா

Instructions

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சத்து மாவை போடவும். அங்கன்வாடி சத்துமாவு அல்லது கடையில் வாங்கிய சத்துமாவு உங்கள் விருப்பம்போல் எடுத்து  கொள்ளவும்.எடுத்து கொண்ட சத்து மாவை பொடியாக அரைத்து கொள்ளவும்.
  • பின் இதில்  சர்க்கரை , வெண்ணிலா எசன்ஸ் ,  சமையல் எண்ணெய் சேர்த்து நன்றாக  அரைத்து கொள்ளவும். வெண்ணிலா எசன்ஸ் அல்லது ஏலக்காய் சேர்த்து கொள்வது உங்கள் விருப்பம்.
  • பின் முட்டையை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.  முட்டை வாசனை பிடிக்காதவர்கள் 14  கப் தயிர் சேர்த்து கொள்ளலாம்.
     
  • அரைத்த மாவை ஒரு  பாத்திரத்தில் மாற்றி சிறிது சிறிதாக பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.இதில்  பேக்கிங்சோடா சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.
  • பின் கேக் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் தடவி பின் கேக் செய்ய தயார் செய்து வைத்துள்ள மாவை கொட்டி நன்றாக தட்டவும். அப்போது தான் கேக்கில் காற்று குமிழ்கள் இருக்காது.
  • குக்கரில் கேக் பாத்திரத்திம் வைக்க ஸ்டாண்டை வைத்த 10 நிமிடம் சூடாக்கி கொள்ளவும்.குக்கர் சூடானதும்  அதில்கேக்கை வைத்து 20 நிமிடம் விசில் போடாமல் வைத்து வேக வைக்கவும்.
  • 20 நிமிடத்திற்கு பிறகு குக்கர் மூடியை திறந்து விட்டு ஒரு குச்சி வைத்து கேக்கை குத்தி பார்த்தால் குச்சியில் கேக் ஒட்டாமல் வர வேண்டும். அப்படிவந்தால் கேக் தயார் என்று பொருள்.
  • பின் கேக் ஆறியதும் சுற்றியுள்ள பக்கங்களை லேசாக பிரித்து விட்டு ஒரு தட்டில் தலைகீழாக கொட்ட வேண்டும்.இதோ சுவையான சத்தான பஞ்சு போன்ற சத்து மாவு கேக் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 339kcal | Carbohydrates: 72.6g | Protein: 13.7g | Fat: 1.9g | Saturated Fat: 0.3g | Potassium: 405mg | Fiber: 12.2g | Iron: 3.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

4 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

7 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

17 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago