சளி, இருமல், ஆஸ்துமா நோய்க்கு தீர்வாக இருக்கும் அற்புத சக்தி கொண்ட சுண்டை வற்றல்!

- Advertisement -

சுண்டைக்காய்… வீட்டுத் தோட்டங்களிலும் ஈரமான நிலங்களிலும் தானாக வளரக்கூடியது. கடுகி, அமரக்காய் என்ற வேறு பெயர்களைக் கொண்ட இது கத்தரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச்செடி. இதன் இலைகள் கொத்தாகவும், கிளைகளுடனும் சுணையுடனும் காணப்படும். வெள்ளை நிறமுடைய இதன் பூக்கள் கொத்தாக வளரக்கூடியவை. உருண்டை வடிவிலான இதன் காய்கள் கொத்து கொத்தாக காய்க்கும். கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் உடைய இதைச் சாப்பிட்டால் தொண்டைச்சளி குறையும்; வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும்; பசியை அதிகரிக்கும்.

-விளம்பரம்-

கீரைப்பூச்சி வெளியேறும்

சுண்டைக்காயை பச்சையாகவும், மோர், உப்பு சேர்த்து ஊற வைத்து வற்றலாக்கியும் சாப்பிடலாம். மிகவும் குறிப்பாக இனிப்புப் பண்டங்களை அதிகமாகச் சாப்பிடுவதாலும் மலக்குடலில் அசுத்தம் சேர்தாலும், வாய்வுக்கோளாறாலும் குடலில் பூச்சிகள் உற்பத்தியாகும். குழந்தைகளைப் பொறுத்தமட்டில் கீரைப்பூச்சி, திமிர்ப்பூச்சி, கொக்கிப்புழு, நாடாப்புழு போன்றவை உருவாகும். இதற்கு சுண்டைக்காயைச் சமைத்துக் கொடுத்து வந்தால் சரியாகும்.

- Advertisement -

செரிமானக்கோளாறு போக்கும்

செரிமானக் கோளாறால் சிலர் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் சுண்டைக்காய் வற்றலை வறுத்து மதியம், இரவு உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாம் சாப்பிட்ட உணவு எளிதாக செரிமானமாகும். சில நாட்கள் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் இயற்கையாகவே செரிமான சக்தி அதிகரித்துவிடும். பித்தம் தொடர்பான நோயால் அவதிப்படுபவர்கள் சுண்டைக்காய் வற்றலைச் சாப்பிடுவதால் பிரச்சினைகள் தீரும்.

சளி ஆஸ்துமா அவதி

கிராணிக் கழிச்சல் எனப்படும் பேதிக் கோளாறு, சீத பேதி போன்றவை சரியாகவும் சுண்டை வற்றலை வறுத்துச் சாப்பிடலாம். காரம் சேர்க்காமல் இதைச் சாப்பிடுவதால் நாளடைவில் பிரச்சினை சரியாகும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அவதிப்படுபவர்களும் இதைச் சாப்பிட்டு பலன் பெறலாம். சுண்டை வற்றலுடன் சம அளவு ஓமம், சிறிது மிளகு சேர்த்து வறுத்துப் பொடியாக்கி உணவில் சேர்த்துச் சாப்பிட்டாலும் சளி விலகும். மழைக்காலத்தில் சளி, இருமல் தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறவும் ஆஸ்துமா அவதி இல்லாமல் வாழவும் இதைச் சாப்பிட்டு வரலாம்.

நெஞ்சு கரித்தல் மூலம்

சுண்டை வற்றலுடன் கைப்பிடி கறிவேப்பிலை, மிளகு, சீரகம். வெந்தயம் தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடியாக்கி பகல் உணவின்போது முதல் கவளத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இப்படி 5 முதல் 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு கரித்துக்கொண்டு ஜீரணமாகாமல் இருப்பது, வாந்தி, நாக்கு ருசியில்லாமை, வாய்வுக்கோளாறு, மூல நோய்த்தொல்லை ஆகியவை விலகும். சர்க்கரை நோயாளிகளும்கூட இதைச் சாப்பிட்டு வந்தால் நோயின்றி வாழலாம்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here