Advertisement
ஸ்வீட்ஸ்

மொறு மொறுப்பான இனிப்பு சீடை எப்படி செய்து என்று தெரியுமா ? தெரியாதவுங்க தெரிஞ்சிகோங்க!

Advertisement

தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் நம்ம வீட்டுல வந்தாலே நம்ம நிறைய இனிப்பு பலகாரங்களும் கார பலகாரங்களும் செய்வோம். அதிரசம் ,முறுக்கு, சுய்யம், கலகலா, வடை, அப்பம், குலோப் ஜாமுன், ரசகுல்லா, அப்படின்னு எக்கச்சக்கமான உணவுகளை சொல்லிக்கிட்டே போகலாம் அந்த அளவுக்கு நம்ம வீட்ல நிறைய பலகாரங்கள் நம்ம செய்வோம். ஆனா இப்போ எல்லாம் நம்ம வீட்ல இனிப்பு சீடை பெருசா யாரும் செய்றதில்லை. காரணம் இனிப்பு சீடை செய்வதற்கான பக்குவம் நிறைய பேருக்கு தெரிவது இல்லை.

இந்த இனிப்பு சீடை மொறு மொறுன்னு இனிப்பா செஞ்சி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஆனா ஒரு சிலர் மட்டுமே இதை பக்குவமா செய்வாங்க. அந்த காலத்துல எல்லாம் எல்லார் வீட்டுலயும் அதிரசமும் சீடையும் கண்டிப்பா விசேஷங்கள் அன்னைக்கும் பண்டிகை அன்னைக்கும் செய்வாங்க. இப்பதான் அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுகிட்டே வருது. நம்மளும் பக்குவமா இந்த இனிப்பு சீடைய வீட்ல செஞ்சு சாப்பிடலாம். இதோட சுவையும் அந்த காலத்துல நம்ம பாட்டி கையாள சாப்பிட்ட அதே சுவையுடன் தான் இருக்கும். இனிப்பு சீடை மாவு அரைச்சு வறுத்து அதை பிசைஞ்சு பக்குவமா எப்படி செய்வது என்று இப்ப நம்ம பாக்க போறோம்.

Advertisement

குழந்தைகளுக்கு இதை ஸ்கூலுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்து விட்டா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல வேலை பாக்குறவங்களும் கூட அப்பப்ப ஒன்னு ரெண்டு எடுத்து வாயில போட்டுக்கிட்டு ஜாலியா வேலை பார்க்கலாம். அந்த அளவுக்கு பாரம்பரியமான சுவையான ஒன்னு தான் இந்த இனிப்பு சீடை. இப்ப வாங்க முறுமுறுப்பான இனிப்பான இந்த இனிப்பு சீடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இனிப்பு சீடை | Sweet Seedai Recipe In Tamil

Print Recipe
இனிப்பு சீடை மொறு மொறுன்னு இனிப்பா செஞ்சி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஆனா ஒரு சிலர்மட்டுமே இதை பக்குவமா செய்வாங்க. அந்த காலத்துல எல்லாம் எல்லார் வீட்டுலயும் அதிரசமும்சீடையும் கண்டிப்பா விசேஷங்கள்
Advertisement
அன்னைக்கும் பண்டிகை அன்னைக்கும் செய்வாங்க. இப்பதான்அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுகிட்டே வருது. நம்மளும் பக்குவமா இந்த இனிப்பு சீடையவீட்ல செஞ்சு சாப்பிடலாம். இதோட சுவையும் அந்த காலத்துல நம்ம பாட்டி கையாள சாப்பிட்டஅதே சுவையுடன் தான் இருக்கும். இனிப்பு சீடை மாவு அரைச்சு வறுத்து அதை பிசைஞ்சு பக்குவமாஎப்படி செய்வது என்று இப்ப நம்ம பாக்க போறோம்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Sweet Seedai
Prep Time 5 minutes
Cook Time
Advertisement
10 minutes
Servings 4
Calories 221

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் பச்சரிசி
  • 1 கப் துருவிய வெல்லம்
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 டீஸ்பூன் எள்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி ஒரு சுத்தமான துணியில் போட்டு நிழலில் நன்றாக காய வைக்கவும். நன்றாக காய்ந்தவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயில் சலித்த மாவை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லம் சேர்த்து அதனுடன் தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சவும்
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் சிறிது வெல்லக்கரைசலை எடுத்து போட்டு அது உருண்டையாக வரும் அளவிற்கு வெல்லப்பாகை காய்ச்சிக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் வறுத்து வைத்துள்ள மாவு வெல்லப்பாகு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
     
  • ஒரு கடாயில் எள் சேர்த்த பொறிந்த உடனே மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.தேங்காய் துருவல் மற்றும் உளுந்தம் மாவு இது இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
  • ஒரு மணி நேரம் கழித்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் மாவிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக வைத்து பொரித்து எடுக்கவும் .அனைத்து மாவுகளையும் இதே மாதிரி குறித்து எடுத்தால் சுவையான இனிப்பு சீடை மொறுமொறுப்பாக தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 221kcal | Carbohydrates: 43.2g | Protein: 8.1g | Cholesterol: 12mg | Sodium: 231mg | Potassium: 213mg | Calcium: 12mg
Advertisement
Ramya

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

4 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

12 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

20 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago